வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
''போலீஸ்காரங்க பாக்கெட்ல இருந்தே பணத்தை உருவிடுறாருங்க...'' என்றபடியே பிஸ்கட்டை கடித்தார், அந்தோணிசாமி.

''யாருப்பா அந்த கில்லாடி...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''திருச்சியில, கே.கே. நகர், பாலக்கரை, ஸ்ரீரங்கம் மற்றும் ஆயுதப்படை பிரிவுன்னு, 1,000க்கும் மேற்பட்ட போலீசார் பணியில இருக்காங்க... இவங்களுக்கு, 'குவார்ட்டர்ஸ்' ஒதுக்கி குடுக்கிற கிளர்க் செய்யுற அடாவடி தாங்க முடியலைங்க...
''புதுசா பணியில சேரும் போலீஸ்காரர், கிளர்க்கை, 'வெயிட்'டா கவனிச்சா தான் உடனடியா வீடு ஒதுக்குவாரு... இல்லன்னா, அலைய விடுவாரு... ரொம்ப அழுத்தம் குடுத்தா, பாழடைஞ்ச வீட்டை தலையில கட்டிடுவாருங்க...
![]()
|
''இவர் மேல உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது தான் புரியாத புதிரா இருக்குதுங்க...'' என, அந்தோணிசாமி முடிக்க, ''வாங்க டேவிட் தம்பி... எங்க ஆளையே காணலை...'' என, நண்பரிடம் பேச்சு கொடுத்தார் அண்ணாச்சி.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement