வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'இன்று இரவு புயல் கரையை கடக்க உள்ள நிலையில், பொது மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும். தேவையான அத்தியாவசியப் பொருட்கள், காய்கறி, பால் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்' என, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
![]()
|
புயலை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, தலைமைச் செயலர் இறையன்பு தலைமையில், நேற்று பல்வேறு துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
பின், தலைமைச் செயலர் இறையன்பு வழங்கிய அறிவுரைகள்:
கன மழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் எடுக்க வேண்டும்
முன்னெச்சரிக்கை செய்திகள், 'TNSMART' எனும் செயலி மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக, தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்
பேரிடரின்போது போக்குவரத்தை சீரமைக்க, காவல் துறை போதுமான காவலர்களை ஈடுபடுத்த வேண்டும்
பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய இடங்களில், முன்கூட்டியே தேவையான படகுகள் மற்றும் உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும்
மறு அறிவிப்பு வரும் வரை, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்
காற்றில் விழும் மரங்களை அகற்ற, மர அறுப்பான்கள் மற்றும் இதர உபகரணங்களுடன் நடமாடும் குழுக்கள் அமைக்க வேண்டும்
பால் மற்றும் பால் பவுடர் வினியோகம் தடையில்லாமல் நடக்க, உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்
பொது மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும். தேவையான அத்தியாவசியப் பொருட்கள், காய்கறி, பால் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளவும்
![]()
|
கடற்கரைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பலத்த காற்று வீசும்போது, மரங்களின் கீழ் நிற்பதை தவிர்க்க வேண்டும். நீர் நிலைகள் அருகிலும், பலத்த காற்று வீசும்போது திறந்தவெளியிலும், 'செல்பி' எடுப்பதை தவிர்க்க வேண்டும்
மெழுகுவர்த்தி, 'டார்ச் லைட்' மற்றும் தீப்பெட்டி, 'பேட்டரி'கள், பேண்டேஜ், உலர்ந்த உணவு வகை, குடிநீர், மருந்துகள் போன்றவை அடங்கிய, அவசர உதவி பெட்டகத்தை தயாராக வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அறிவுரை வழங்கியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement