வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-கடந்த எட்டு மாதங்களில், பயணியர் மற்றும் சரக்கு ரயில்கள் வாயிலாக, தெற்கு ரயில்வேக்கு 6,506 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
![]()
|
கொரோனா பாதிப்புக்கு பின், நாடு முழுதும் விரைவு, பயணியர், மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், பயணியர் தேவை அதிகமாக உள்ள வழித்தடங்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், ரயில்வே வருவாய் அதிகரித்து வருகிறது.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
பயணியர் தேவை கருதி, போதிய அளவில் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறோம். சரக்குகளை அதிகளவில் கையாளும் வகையில், சரக்கு ரயில் போக்குவரத்து சேவையை மேம்படுத்தி வருகிறோம். இதனால், வருவாய் அதிகரித்து வருகிறது.
![]()
|
கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரையில் பயணியர், சரக்கு ரயில்கள் வாயிலாக, 6,506 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
இதில் பயணியர் ரயில்கள் வாயிலாக, 4,161 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது, கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 11.9 சதவீதம் அதிகம். சரக்கு ரயில் போக்குவரத்து வாயிலாக, 2,345 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது, கடந்த ஆண்டை விட 15.49 சதவீதம் அதிகம். ரயில்களில் சரக்குகள் கையாளுவதும், 22 சதவீதம் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement