சென்னை : புயல் எதிரொலியாக, கல்வி அதிகாரிகள் ஆய்வு கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம், சென்னையில் இன்றும், நாளையும் நடக்கவிருந்தது.
இந்நிலையில், 'மாண்டஸ்' புயல், சென்னை அருகே இன்று கரையை கடக்கும் என, எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இதனால், கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம், வரும் 12, 13ம் தேதிகளுக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக, பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.