சென்னை : திருச்சியில் இருந்து, சென்னை எழும்பூர் வழியாக, குஜராத் மாநிலம், அகமதாபாத்துக்கு, சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
l அகமதாபாத்தில் இருந்து, டிச., 22, 29; அடுத்த ஆண்டு ஜன., 5, 12, 19, 26ம் தேதிகளில், காலை, 9:30 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில், மூன்றாம் நாள் அதிகாலை 3:45 மணிக்கு திருச்சி சென்றடையும்
l திருச்சியில் இருந்து டிச., 25; அடுத்த ஆண்டு ஜன., 1, 8, 15, 22, 29ம் தேதிகளில் அதிகாலை, 5:45 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில், மறுநாள் இரவு, 9:15 மணிக்கு அகமதாபாத் சென்றடையும். இந்த சிறப்பு ரயில்கள், அரக்கோணம், பெரம்பூர், சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக செல்லும். இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு, இன்று காலை, 8:00 மணிக்கு துவங்குகிறது.