12 ராசிகளுக்கான வார பலனும் பரிகாரமும்

Updated : டிச 09, 2022 | Added : டிச 09, 2022 | |
Advertisement
வெள்ளி முதல் வியாழன் வரை (9.12.2022 - 15.12.2022) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன், உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.மேஷம்:புதன், சுக்கிரன் சந்திரன் நன்மை வழங்குவர். குலதெய்வ வழிபாடு நலம் தரும்.அசுவினி: உங்கள் எண்ணம் ஈடேறும் வாரம் இது. குடும்பத்தில் சுபநிகழ்ச்சிக்கு வாய்ப்புண்டாகும். வரவுகள் அதிகரிக்கும். உங்கள் செயல்களில் லாபம்
வாரராசி, ராசிபலன், வாரபலன், பரிகாரம், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், துலாம், கன்னி, விருச்சிகம்,  தனுசு, மகரம், கும்பம், மீனம்

வெள்ளி முதல் வியாழன் வரை (9.12.2022 - 15.12.2022) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன், உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.



மேஷம்:

புதன், சுக்கிரன் சந்திரன் நன்மை வழங்குவர். குலதெய்வ வழிபாடு நலம் தரும்.


அசுவினி: உங்கள் எண்ணம் ஈடேறும் வாரம் இது. குடும்பத்தில் சுபநிகழ்ச்சிக்கு வாய்ப்புண்டாகும். வரவுகள் அதிகரிக்கும். உங்கள் செயல்களில் லாபம் காண்பீர்கள்.


பரணி: உங்கள் எண்ணம் எளிதாக நிறைவேறும். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். செயல்களில் அனுகூலம் தோன்றும். அரசு வழியிலான முயற்சிகள் பலிதமாகும்.


கார்த்திகை 1ம் பாதம்: உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். புதிய சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும். புதிய நட்புகளிடம் அதிகமான நெருக்கம் வேண்டாம்.

எதிர்பாலினரிடம் எச்சரிக்கை அவசியம்.




ரிஷபம்:


latest tamil news


குரு, கேது, நன்மை வழங்குவார்கள். துர்கை வழிபாடு துன்பம் போக்கும்.


கார்த்திகை 2, 3, 4: வெள்ளி, சனியில் குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். எதிர்காலம் குறித்த செயல்களில் ஈடுபடுவீர்கள். புதியசொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும். திட்டமிட்டு

செயல்பட்டு வெற்றி அடைவீர்கள்.


ரோகிணி: முதல் இரண்டு நாட்களும் எதிர்பார்த்த நன்மை அடைவீர்கள். ஞாயிறு முதல் பொறுப்பு அதிகரிக்கும். வெளியூர் பயணம் லாபம் தரும். செலவுக்கேற்ற வரவு வந்து சேரும். புதிய முயற்சி லாபமாகும்.


மிருகசீரிடம் 1, 2: எதிர்பார்ப்பு நிறைவேறும் வாரம் இது. குடும்பத்திற்காக சுபச்செலவுகள் ஏற்படும் என்றாலும் அதற்கேற்ப வரவும் உண்டாகும். விலகிச்சென்ற உறவினர்கள் இல்லம் தேடி வருவர். திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.




மிதுனம்:


ராகு, சூரியன் நன்மை வழங்குவர். ஸ்ரீரங்கநாதரை வழிபட சங்கடம் தீரும்.


மிருகசீரிடம் 3, 4: ஞாயிறு மதியம் வரை செலவு அதிகரிக்கும். அலைச்சல் உண்டாகும். அதன்பின் மனம் மகிழும்படியான நிலை ஏற்படும். செயலில் வேகம் தோன்றும். நினைத்ததை நிறைவேற்றிக்

கொள்வீர்கள்.


திருவாதிரை: ஞாயிறு மதியம் வரை மகிழ்ச்சியாக செல்லும். விருப்பம் பூர்த்தியாகும். அதன்பின் செலவுகளில் கவனமும் பணத்தில் பாதுகாப்பும் தேவை. புதன், வியாழனில் எண்ணம் நிறைவேறும்.


புனர்பூசம் 1, 2, 3: வாரத்தின் முதல் இரண்டு நாட்களும் எண்ணங்கள் நிறைவேறும். ஞாயிறு மதியம் முதல் செயல்களில் வேகம் அதிகரிக்கும். லாபஸ்தான ராகுவால் அந்நிய மனிதரின் உதவி கிடைக்கும்.



கடகம்:


புதன், குரு நன்மை வழங்குவார்கள். சந்திரபகவானை மனதில் எண்ணி செயல்படுங்கள்.


புனர்பூசம் 4: ஞாயிறு மதியம் வரை செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் உண்டாகும். அதன்பின் திட்டமிட்டு செயல்படுவீர்கள். குடும்ப நலனில் அக்கறை கொள்வீர்கள். வருமானத்திற்குரிய வழிகள்

தெரியும்.


பூசம்: வாரத்தின் முதல் இரண்டு நாட்களும் சுபச்செலவு உண்டாகும். புதிய இடம் வாங்கும் முயற்சி நிறைவேறும். ஞாயிறு மதியம் முதல் வியாபாரத்தை விரிவு செய்ய முயற்சிப்பீர்கள்.


ஆயில்யம்: வார தொடக்கத்தில் செலவுகளை சந்திக்க வேண்டி வரும். திங்கள் முதல் திருப்பம் உண்டாகும். வரவுகள் வரத் தொடங்கும். வேலை தேடியவர்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும்.



சிம்மம்:


latest tamil news

கேது, சுக்கிரன், புதன், சனி நன்மை வழங்குவர். சூரிய வழிபாட்டால் வாழ்வு உயரும்.


மகம்: வாரத்தின் முற்பகுதியில் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். தொழிலில் இருந்த தடைகள் விலகும். அரசு வழியில் நன்மை உண்டாகும். ஞாயிறு மதியம் முதல் செலவு அதிகரிக்கும்.


பூரம்: ஞாயிறு மதியம் வரை உங்கள் முயற்சியில் இருந்த தடைகள் விலகி ஆதாய நிலை உண்டாகும். அரசியல் வாதிகளின் செல்வாக்கு உயரும். அதன்பின் எதிர்பாராத செலவுகளும் பயணமும்

உண்டாகும். புதன் வியாழனில் புதிய முயற்சி லாபமாகும்.


உத்திரம் 1: வாரத்தின் முற் பகுதியில் எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும். முயற்சிகள் வெற்றியாகும். அதன்பின் செலவுகள் அதிகரிக்கும். புதன் வியாழனில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்கள் லாபம்தரும்.




கன்னி:


சூரியன், சுக்கிரன், புதன், குரு உங்கள் நிலையை உயர்த்துவர். நவகிரக வழிபாடு சங்கடங்கள் தீர்க்கும்.


உத்திரம் 2, 3, 4: உங்கள் எண்ணங்கள் நிறைவேறும் வாரம் இது. நீங்கள் மேற்கொள்ளும் செயல்கள் வெற்றியாகும். வியாபாரம், தொழிலில் திட்டமிட்டு செயல்பட்டு் லாபம் காண்பீர்கள். ஒரு சிலருக்கு புதிய

வேலை அமையும். புதன் வியாழனில் செலவுகள் அதிகரிக்கும்.


அஸ்தம்: வெள்ளி, சனியில் முயற்சிகள் வெற்றியாகும். ஞாயிறு முதல் எண்ணங்கள் நிறைவேறும் வருமானம் அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். புதன், வியாழனில் செலவில் கவனம் தேவை.


சித்திரை 1, 2: வாரத் தொடக்கத்தில் லாபம் காண்பீர்கள். அதன்பின் உங்கள் அணுகுமுறையால் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். புதன், வியாழனில் திடீர் செலவு ஏற்படும்.



துலாம்:

சுக்கிரன் நன்மை வழங்குவார். விநாயகர் வழிபாடு சங்கடம் போக்கும்.


சித்திரை 3, 4: சந்திர பலத்தால் முயற்சிகளில் ஆதாயம் அடைவீர்கள். தடைபட்ட வருவாய் வரத்தொடங்கும். வியாபாரம், தொழில் நிலையில் லாபம் அதிகரிக்கும்.


சுவாதி: பிரதான கிரகங்கள் லாபம் தரும் நிலையில் இல்லை. ஆனாலும் சந்திரனால் சங்கடம் தீரும். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். அந்நியரால் லாபம் உண்டாகும். கடனை அடைப்பீர்கள்.


விசாகம் 1, 2, 3: ஜென்ம கேதுவால் உங்கள் செயல்களில் தடுமாற்றம் உண்டாகும். விருப்பங்கள் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். புதன் வியாழனில் லாப சந்திரனால் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். வரவு அதிகரிக்கும்.



விருச்சிகம்:


சுக்கிரன், புதன், சனி, குரு, ராகு, நன்மை வழங்குவர். முருகனை வழிபட பட்டுவர நெருக்கடி விலகும்.


விசாகம் 4: வெள்ளி முதல் ஞாயிறு மதியம் வரை சந்திராஷ்டமம் என்பதால் முயற்சியைத் தவிர்ப்பதுடன் கவனமாக செயல்படவும். அதன்பின் தடைபட்ட செயல்கள் வெற்றி பெறும்.


அனுஷம்: வாரத்தின் தொடக்கத்தில் தடைகளும், தோல்வியும் உண்டாகலாம். நிதானித்து செயல்படுங்கள். ஞாயிறு மதியம் முதல் மேற்கொள்ளும் முயற்சி உங்களுக்கு சாதகமாகும். லாபம் கூடும்.


கேட்டை: ஞாயிறு மதியம் வரை செயல்களில் தடை, தாமதங்களும் ஏற்படும். அதன்பின் திட்டமிட்ட செயல்கள் நடந்தேறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்துவீர்கள். சிலருக்கு திருமண யோகம் கூடி

வரும்.


சந்திராஷ்டமம்

9.12.2022 காலை 6:00 மணி 2:07 மணி - 11.12.2022 மதியம் 1:30 மணி



தனுசு:


சுக்கிரன், புதன், கேது நன்மை வழங்குவார்கள். குரு பகவானை மனதில் எண்ணி செயல்படுங்கள்.


மூலம்: ஞாயிறு மதியம் வரை நீங்கள் ஈடுபடும் செயல்களில் எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர்கள். தொழிலில் உங்கள் அனுகுமுறைகள் லாபத்தை ஏற்படுத்தும். அதன்பின் சந்திராஷ்டமம்

தொடங்குவதால் புதிய முயற்சிகள் வேண்டாம்.


பூராடம்: லாப ஸ்தான கேதுவால் உங்கள் முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றியை அடைவீர்கள். ஞாயிறு மதியம் முதல் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சந்திரனால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்


உத்திராடம் 1: வாரத்தின் முற்பகுதியில் நீங்கள் திட்டமிட்டிருந்த செயல்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். ஞாயிறு மதியம் உங்கள் செயல்களில் தடைகள் தோன்றும் என்பதால் விழிப்புணர்வு அவசியம்.


சந்திராஷ்டமம்

11.12.2022 மதியம் 1:31 மணி - 14.12.2022 நள்ளிரவு 1:07 மணி




மகரம்:


சூரியன், சுக்கிரன் நன்மை வழங்குவர். அண்ணாமலையாரை நினைக்க வெற்றி சேரும்.


உத்திராடம் 2, 3, 4: செவ்வாய் வரை நினைத்ததை சாதிப்பீர்கள். விரும்பியதை அடைவீர்கள். எதிரி தொல்லை விலகும். எண்ணம் நிறைவேற்றும். அதன்பின் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை

அவசியம்.


திருவோணம்: வாரத்தின் முதல் ஐந்து நாட்செயல்களில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். புதன், வியாழனில் தடைகளை சந்திப்பீர்கள்.


அவிட்டம் 1, 2: அரசு வழியிலான முயற்சி ஆதாயமாகும். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னை தீரும். எதிர்பார்ப்பை பிள்ளைகள் நிறைவேற்றுவார்கள். தொழிலில் இருந்த மந்த நிலை அகலும். புதன்

வியாழனில் நெருக்கடிகளுக்கு ஆளாவீர்கள்.


சந்திராஷ்டமம்

14.12.22 நள்ளிரவு 1:07 மணி - 16.12.2022 காலை 11:18 மணி



கும்பம்:


ராகு, சூரியன், சுக்கிரன், புதன் நன்மை வழங்குவர். சிவனை வழிபட சிரமம் தீரும்.


அவிட்டம் 3, 4: வெள்ளி, சனியில் சொத்து பிரச்னை தலையெடுக்கும். ஞாயிறு மதியம் முதல் பொறுப்பு அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர்கள்.


சதயம்: முதல் இரண்டு நாட்களும் உங்கள் முயற்சிகளில் விழிப்புணர்வு தேவை. ஞாயிறு முதல் மனம் மகிழும்படியான சம்பவம் நடந்தேறும். புதன், வியாழனில் முயற்சியில் கவனம் செல்லும்.


பூரட்டாதி 1, 2, 3: பத்தாமிட சூரியனால் முயற்சிகள் வெற்றியாகும் என்றாலும் செயல்களில் நிதானம் அவசியம். புதிய சொத்து வாங்கும் போது வில்லங்கம் பாருங்கள். அடுத்தவரை நம்பி எந்த செயலிலும் ஈடுபடாதீர்கள்.




மீனம்:


சனி, புதன் நன்மைகள் வழங்குவர். குருபகவானை எண்ணி செயல்பட நன்மை கூடும்.


பூரட்டாதி 4: முயற்சிகள் தாமதமாகும். ஞாயிறு மதியம் முதல் பொறுப்பு அதிகரிக்கும் வேலைப்பளு கூடும். பிள்ளைகள் வழியே சில சங்கடங்கள் உண்டாகும். புதன், வியாழனில் முயற்சி வெற்றியாகும்.


உத்திரட்டாதி: வெள்ளி, சனியில் கவனமாக செயல்படுங்கள். வார்த்தைகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். இல்லையெனில் அதனால் சங்கடம் ஏற்படலாம். ஞாயிறு மதியம் முதல் உங்கள்

அணுகுமுறை மாறும். அதனால் லாப நிலை உண்டாகும்.


ரேவதி: வாரத்தின் முற்பகுதியில் தடை, தாமதம் உண்டாகும். ஞாயிறு மதியம் முதல் குடும்பத்தில் சில பிரச்னைகள் தோன்றும். புதன், வியாழனில் நினைத்தவற்றில் வெற்றி காண்பீர்கள். உங்கள் எண்ணம்

நிறைவேறும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X