தூத்துக்குடி பீச் ரோட்டில் ரோச் பூங்கா பகுதியில் சுமார் 50 பைபர் படகுகள் மூலமாக மீன்பிடித் தொழில் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் வழக்கத்திற்கு மாறாக இன்று கடல் சுமார் 30 அடி தூரம் உள்வாங்கியது இதன் காரணமாக கடலின் தரை வெளியே தென்பட்டது. அதில் இருக்கும் சிறிய மீன்கள் மற்றும் இறால்களை கொக்கு, நாரை பிளமிங்கோ உள்ளிட்ட பறவைகள் கொத்திச் சென்றது.
இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள், வழக்கமாக அமாவாசை பௌர்ணமி தினங்களில் தூத்துக்குடியில் பல இடங்களில் சுமார் இரண்டடி முதல் ஐந்து அடி தூரம் வரை கடல் உள்வாங்கும் இன்று வழக்கத்திற்கு மாறாக சுமார் 30 அடி தூரம் கடல் உள்வாங்கியுள்ளது ஏன் என்று தெரியவில்லை என்றனர்