தரங்கம்பாடியில் கடல்சீற்றம்; மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Added : டிச 09, 2022 | |
Advertisement
மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் கடல் சீற்றம், மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை, தரங்கம்பாடியில் சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.வங்க கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக தரங்கம்பாடி பகுதியில்
தரங்கம்பாடியில் கடல்சீற்றம்; மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் கடல் சீற்றம், மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை, தரங்கம்பாடியில் சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.



வங்க கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக தரங்கம்பாடி பகுதியில் கடல் சீற்றம் காரணமாக கரையில் மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளது. மண்ணரிப்பின் காரணமாக தரங்கம்பாடி வரலாற்றுச் சிறப்புமிக்க டேனிஷ் கோட்டையின் பழங்காலத்தில் சுற்றுச்சுவர் கடல் சீற்றத்தாலும் ஆழிபேரலைகளாலும் சிதலமடைந்து மண்ணுக்குள் புதைந்து கிடந்த நிலையில் தற்போது வெளியில் தெரிய தொடங்கியுள்ளது.


மேலும் கடல் சீற்றம் மற்றும் மண்ணரிப்பால் டேனிஷ் கோட்டையின் பிரதான சுவர் பாதிக்கும் அபாயம் உள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள புயலின் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட மீன்வளத் துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தரங்கம்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பத்திற்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சார்ந்த மீனவர்கள் தங்கள் படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.


தரங்கம்பாடி புகழ்பெற்ற சுற்றுலா ஸ்தலம் என்பதால் புயலின் காரணமாக அங்கு பொதுமக்கள் வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X