95ல் சாதாரணம்: 2022ல் சாதனை: மோடியின் பழைய புகைப்படம் வைரல்

Updated : டிச 10, 2022 | Added : டிச 09, 2022 | கருத்துகள் (65) | |
Advertisement
ஆமதாபாத்: குஜராத்தில் 1995ம் ஆண்டு முதன்முறையாக பா.ஜ., ஆட்சியை பிடித்தது. அப்போது கேசுவாய் படேல் முதல்வராக பதவியேற்ற நிகழ்ச்சியில் நரேந்திர மோடி, அத்வானி உள்ளிட்ட பலர் பங்கேற்ற புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு காரணம் குஜராத்தில் தற்போது தொடர்ந்து 7வது முறையாக ஆட்சியை பிடிக்க காரணமாக திகழும் மோடியும் இடம்பெற்றுள்ளார். மேலும்
Gujarat, BJP, Narendra Modi, Old Photo, Viral, குஜராத், பாஜக, ஆட்சி, முதல்வர் பதவியேற்பு, நரேந்திர மோடி, புகைப்படம், வைரல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஆமதாபாத்: குஜராத்தில் 1995ம் ஆண்டு முதன்முறையாக பா.ஜ., ஆட்சியை பிடித்தது. அப்போது கேசுவாய் படேல் முதல்வராக பதவியேற்ற நிகழ்ச்சியில் நரேந்திர மோடி, அத்வானி உள்ளிட்ட பலர் பங்கேற்ற புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.


இதற்கு காரணம் குஜராத்தில் தற்போது தொடர்ந்து 7வது முறையாக ஆட்சியை பிடிக்க காரணமாக திகழும் மோடியும் இடம்பெற்றுள்ளார். மேலும் அப்புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள பலரும் இந்திய அரசியலில் முக்கிய பதவிகளில் அங்கம் வகித்தது குறிப்பிடத்தக்கது.குஜராத்தின் 15வது சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று (டிச.,8) வெளியானது. இதில் அம்மாநிலத்தில் இதுவரை எந்த கட்சியும் பெற்றிடாத வகையிலான வெற்றியை பா.ஜ., பெற்றுள்ளது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பா.ஜ., 156 இடங்களில் வென்று சாதனை படைத்துள்ளது. 1995ம் ஆண்டு நடந்த 9வது சட்டசபை தேர்தலில் கேசுபாய் தலைமையில் பா.ஜ., ஆட்சியை பிடித்தது. அப்போது இருந்து அசைக்க முடியாத கட்சியாக பா.ஜ., குஜராத்தில் நிலைத்து நிற்கிறது.1995ம் ஆண்டு குஜராத் முதல்வராக கேசுபாய் படேல் பதவியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பலர் தற்போது இந்திய அரசியலில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளனர். சிலர் அக்கட்சியின் முக்கிய பதவிகளில் அங்கம் வகிக்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, எல்கே அத்வானி, பைரோன் சிங் ஷெகாவத், ஷங்கர்சிங் வகேலா, ஆனந்தி படேல் போன்ற முக்கிய தலைவர்கள் பலரும் கேசுபாய் படேல் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நரேந்திர மோடி


latest tamil news

1995-ல் குஜராத்தில் பா.ஜ., 121 இடங்களில் வெற்றி பெற்று முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தது. அப்போது நரேந்திர மோடி கட்சியின் மாநிலப் பொறுப்பாளராக இருந்தார். இந்த வெற்றியின் மூலம் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து 1998ல் தேசிய பொதுச் செயலாளராக உருவெடுத்தார்.


2001ம் ஆண்டு வரை இந்தப் பதவியில் இருந்த மோடி, பின்னர் முதல் முறையாக குஜராத்தின் முதல்வராகப் பதவியேற்றார். மோடியின் தலைமையில்தான் 2002, 2007 மற்றும் 2012 சட்டசபைத் தேர்தல்களில் பா.ஜ., வெற்றி பெற்றது. 2014ம் ஆண்டு நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்றார். 2019ல் இரண்டாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.எல்.கே.அத்வானி


latest tamil news

Advertisement

அத்வானி காந்திநகர் லோக்சபா தொகுதியில் இருந்து 1998ல் எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தொடர்ந்து ஐந்து முறை இதே தொகுதியிலிருந்து எம்.பி.,யாக வெற்றி பெற்றார்.


1998ல் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி, 2002ல் துணைப் பிரதமரானார். 2004 பொதுத் தேர்தலில் பா.ஜ., தோல்வியடைந்த பிறகு, அவர் லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். நாடு முழுவதும் ஏற்பட்ட நரேந்திர மோடியின் எழுச்சியின் பின்னணியில் அத்வானி செயல்பட்டார்.
பைரோன் சிங் ஷெகாவத்


latest tamil news

1995ல் ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக பா.ஜ., தலைவர் பைரோன் சிங் ஷெகாவத் இருந்தார். 2002ல் சுஷில் குமார் ஷிண்டேவை தோற்கடித்து துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார். 2007ல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அவர், பிரதீபா பாட்டீலிடம் தோல்வியடைந்தார். பைரோன் சிங் ஷெகாவத் 2010, மே மாதம் மாரடைப்பால் இறந்தார்.
ஷங்கர்சிங் வகேலா


latest tamil news

கேசுபாய் படேல் முதல்வராக பதவியேற்ற ஒரு வருடத்தில், ஷங்கர்சிங் வகேலா பா.ஜ.,வில் கிளர்ச்சியைத் தூண்டினார். இதன்மூலம் கட்சியை இரண்டாக பிரித்து ராஷ்டிரிய ஜனதா கட்சியை துவக்கி காங்கிரசுடன் கூட்டணி அமைத்து 1996ல் முதல்வரானார்.


மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது வகேலா மத்திய அமைச்சராக இருந்தார். 2017ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகிய வகேலா, ‛ஜன் விகல்ப் மோர்ச்சா' என்ற புதிய கட்சியை உருவாக்கி, 2017ல் குஜராத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றிப்பெறவில்லை.
விபுல் சவுத்ரி


latest tamil news

விபுல் சவுத்ரி 1995ல் முதல் முறையாக எம்எல்ஏ ஆனார். அப்போதைய முதல்வர் கேசுவாய் படேலுக்கு எதிரான கிளர்ச்சியில் வகேலாவை ஆதரித்தார் சவுத்ரி. வகேலா முதல்வராக பதவியேற்றதும் சவுத்ரிக்கு உள்துறை இணை அமைச்சர் பதவி கிடைத்தது. பின்னர் அவர் வகேலாவுடன் பிரிந்து 2006 முதல் 2016 வரை துத்சாகர் பால் பண்ணையின் தலைவராக இருந்தார். 2007 சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு மீண்டும் பா.ஜ.,வில் இணைந்த விபுல் சவுத்ரி, பிலோடா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு பெற்றார். சமீபத்தில் ‛அற்புத சேனா' என்னும் தனிக்கட்சி துவக்கி பா.ஜ.,வுக்கு சவால் விடுத்தார். பால்பண்ணை தலைவராக இருந்தபோது ரூ.750 கோடி மோசடி செய்ததாக கடந்த செப்டம்பர் மாதம் விபுல் சவுத்ரி கைது செய்யப்பட்டார்.
ஆனந்தி படேல் மற்றும் சபில்தாஸ் மேத்தா


latest tamil news

ஆனந்தி படேல் 1995ம் ஆண்டு ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்தார். 1998ல் முதன்முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு மூன்று முறை வெற்றி பெற்றார். நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது ஆனந்தி படேல் பல முக்கிய அமைச்சகங்களை வைத்திருந்தார். 2014ல் மோடி பிரதமரானபோது, ​​முதல்வராக பதவியேற்றார்; ஆனால் 2016ல் அவரது பதவி பறிக்கப்பட்டது. அதன்பிறகு அவர் மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் கவர்னராக இருந்து வருகிறார்.


கேசுபாய் படேலுக்கு முன் முதல்வராக இருந்த சபில்தாஸ் மேத்தாவும் ஆனந்தி படலே் படத்தில் காணப்படுகிறார். மேத்தா பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2001 வரை காங்கிரஸில் இருந்த மேத்தா, பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2008ல் உடல்நலக்குறைவால் காலமானார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (65)

mindum vasantham - madurai,இந்தியா
10-டிச-202210:10:04 IST Report Abuse
mindum vasantham Advani Ori mirai predhamar vaippu koduthu thotraar matrapadi dmk
Rate this:
Cancel
T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
10-டிச-202207:57:33 IST Report Abuse
T.Senthilsigamani Vertical Growth by Modiji
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
10-டிச-202205:46:05 IST Report Abuse
sankaseshan உ பி என்றால் உடன் பிறப்புகள் என்று கூட தெரியவில்லை ,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X