வாழப்பாடி: தி.மு.க., ஆட்சியில் சொத்து வரி உயர்வு, வீட்டு வரி உயர்வு, கடை வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை திரும்ப பெற வலியுறுத்தி, தி.மு.க., அரசை கண்டித்து, சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் டவுண் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு, அ.தி.மு.க., சார்பில் ஏற்காடு எம்எல்ஏ சித்ரா தலைமையில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (டிச.,9) காலை நடைபெற்றது. இதில், குழந்தைகள் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க., அயோத்தியாபட்டணம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணி, பேரூர் செயலாளர் ரவி சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.