கண்ணாடி விழுந்து பைக்கில் சென்றவர் பலி

Updated : டிச 09, 2022 | Added : டிச 09, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
காரைக்குடி: பிள்ளையார்பட்டி அருகே உள்ள சிறுகூடல் பட்டியை சேர்ந்தவர் கருப்பணன் மகன் பழனியப்பன் 44. காரைக்குடி பேயன்பட்டி அருகே உள்ள கேஸ் ஏஜென்சி ஒன்றில் வேலை செய்து வந்தார். இவர் இன்று மதியம் சங்கராபுரம் ஊராட்சி தந்தை பெரியார் நகர் ஒன்பதாவது வீதி வழியாக கேஸ் சிலிண்டர்களை பைக்கில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்குள்ள அப்பார்ட்மெண்ட் ஒன்றில்
கண்ணாடி விழுந்து பைக்கில் சென்றவர் பலி

காரைக்குடி: பிள்ளையார்பட்டி அருகே உள்ள சிறுகூடல் பட்டியை சேர்ந்தவர் கருப்பணன் மகன் பழனியப்பன் 44. காரைக்குடி பேயன்பட்டி அருகே உள்ள கேஸ் ஏஜென்சி ஒன்றில் வேலை செய்து வந்தார்.


இவர் இன்று மதியம் சங்கராபுரம் ஊராட்சி தந்தை பெரியார் நகர் ஒன்பதாவது வீதி வழியாக கேஸ் சிலிண்டர்களை பைக்கில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்குள்ள அப்பார்ட்மெண்ட் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி பழனியப்பன் தலையில் விழுந்தது.


இதில் பழனியப்பன் தலை மற்றும் கழுத்தில் கண்ணாடி துண்டுகள் வெட்டி பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியில் நின்று கொண்டிருந்தவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் பழனியப்பனை ஆட்டோவில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சென்ற சிறிது நேரத்திலேயே பழனியப்பன் உயிரிழந்தார்.


சம்பவ இடத்திற்கு வந்த உதவி எஸ்பி ஸ்டாலின் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அப்பார்ட்மெண்டில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடிகள் அகற்றப்பட்டது.


கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோல், அவ்வழியாக சென்ற மாட்டின் மீது கண்ணாடி விழுந்து படுகாயம் அடைந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் அப்பார்ட்மெண்டில் இருந்த கண்ணாடிகள் அகற்றப்படாததே இந்த உயிரிழப்புக்கு காரணம் என புகார் எழுப்பி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து (8)

Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
09-டிச-202220:16:56 IST Report Abuse
Krishnamurthy Venkatesan இப்போதெல்லாம் வட நாட்டு கொத்தனார்கள்தானே (இங்கு வந்த பின் கற்றுக்கொண்டது) வீடு கட்டுகிறார்கள்.
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
09-டிச-202219:40:40 IST Report Abuse
Anantharaman Srinivasan ராமர் பாலம் கட்டிய ராமர் இன்ஜீனியரா என்று கேட்ட வாரிசின் ஆட்சியில் கட்சிகாரனெல்லாம் civil engineering படிக்காமலே வீடு கட்டும் வல்லமையுடன் Flats கட்டி விற்கின்றனர்.
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
09-டிச-202219:31:45 IST Report Abuse
Anantharaman Srinivasan திராவிட ஆட்சியில் கட்சிக்காரனெல்லாம் Side business செய்கிறேன் என்று பிளட்ஸ் பிரமோட் செய்கின்றனர்.. பணமே குறி. தரம் கேள்விக்குறி.. அரசு செய்துகொடுக்க வேண்டிய வேலைக்கே லஞ்சம் வாங்கும் பேர்வழிகள் தங்கள் முதல்போட்டு கட்டும் வீடுகளில் நிச்சயம் தரமான பொருட்களை உபயோகித்திருக்க மாட்டார்கள். ஒரளவு தரமான காண்ட்ராக்டரிடமும் அடித்துபிடித்து லஞ்சம் வாங்கியிருப்பர். கட்டிடத்தில் குறைபாடு உள்ளதால் தான் இரண்டாம் முறையாக விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை விமானநிலையத்தில் அடிக்கடி மேற்கூரை கண்ணாடி விழுந்தது போல், மறுபடியும் ஏற்படாவண்ணம் அரசின் உடனடி நடவடிக்கை தேவை..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X