வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: மாண்டஸ் புயல் சென்னையை நெருங்குவதால் பெரும்பாலான இடங்களில் இருள் சூழ்ந்ததுடன் கனமழையும் கொட்டித்தீர்க்கிறது.
வங்க கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்க உள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை கடற்கரையை புயல் நெருங்கி வருவதால், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருள் சூழ்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எறியவிட்ட ஓட்டிச் செல்கின்றனர். இடைவிடாது கொட்டித்தீர்க்கும் கனமழையால் வாகனஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

தேர்வுகள் ஒத்திவைப்பு
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள், அண்ணா பல்கலையில் நாளை (டிச.,10) நடக்க இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாளை நடைபெற இருந்த டிப்ளமோ தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தேர்வு குறித்த தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.