வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெரம்பலூர்: பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்காக ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளரை(ஆர்.ஐ.,) லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் கொலத்தாநத்தம் பகுதியில் ஆர்.ஐ.,ஆக இருப்பவர் இந்திராணி. அய்யலூர் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மனைவி முத்தரசி, தனக்கு சொந்தமான நிலத்திற்கு பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய இந்திராணியை அணுகியுள்ளார். அதற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார் இந்திராணி. லஞ்சம் கொடுக்க விரும்பாத முத்தரசி, இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
அவர்கள் அளித்த ஆலோசனையில்படி இந்திராணி லஞ்ச பணத்தை கொடுத்தார். அதனை வாங்கிய இந்திராணியை அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சியாம சித்ரா தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.