வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காந்திநகர்: குஜராத் முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக பா.ஜ., சட்டமன்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடக்கவிருப்பதக கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.
குஜராத் சட்டசபைக்கு சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில், பா.ஜ., 156 இடங்களில் வென்று வரலாறு காணாத சாதனை படைத்தது.தொடர்ந்து ஏழாவது முறையாக பா.ஜ. ஆட்சி அமைக்க உள்ளது.
![]()
|
இந்நிலையில் முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக இன்று காலை பா.ஜ. சட்டசபை எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடக்கவிருப்பதாக கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.
இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், எடியூரப்பா உள்ளிட்ட குஜராத் மாநில தேர்தல் பார்வையாளர்கள் பங்கேற்கின்றனர்.முன்னதாக குஜராத் முதல்வராக இருந்த பூபேந்திர படேல் இன்று ராஜினாமா செய்தார்.