வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மாண்டஸ் புயல், பிற்பகல் முதல் தன் ஆக்ரோஷத்தை காட்டியது. கரைப் பகுதிகளில் நுழைந்த மேகக் கூட்டங்கள் அவ்வப்போது பெரும் சப்தத்துடன் சூறைக்காற்றை வீசி, மழையை கொட்டி மிரட்டியது. இதன் வேகம் மணிக்கு, 100 கி.மீ., வரை இருந்தது.
கடந்த, 2016ல் 'வர்தா' புயல், 2018ல் 'கஜா' புயல் தாக்கியபோது, மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.
![]()
|
2020ம் ஆண்டில் 'நிவர்' புயல் தாக்கியபோது, 120 கி.மீ., வேகத்திலும், அதே ஆண்டில் 'புரவி' புயல் தாக்கியபோது, 85 கி.மீ., வேகத்திலும் காற்று வீசியது.