மாண்டஸ் புயல் : தரைக்காற்று வேகம் அதிகரிப்பு (இரவு 10 மணி)

Updated : டிச 09, 2022 | Added : டிச 09, 2022 | |
Advertisement
சென்னை : சென்னை காட்டுப்பாக்கம் ,திருவள்ளூர், ராணிப்பேட்டை பகுதியில் தரைக்காற்று வீசி துவங்கி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது குறித்து இந்திய வானிலை மைய தென் மணடல தலைவர் பாலச்சந்திரன் கூறி இருப்பதாவது: மாண்டஸ் புயல் புதுச்சேரி அருகே 60கிமீ தொலைவில் உள்ளது. புயல் கரையை கடக்க துவங்கும் போது காற்றின் வேகம் 60முதல்75 கி.மீ வரையில் வீச

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : சென்னை காட்டுப்பாக்கம் ,திருவள்ளூர், ராணிப்பேட்டை பகுதியில் தரைக்காற்று வீசி துவங்கி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.



latest tamil news


இது குறித்து இந்திய வானிலை மைய தென் மணடல தலைவர் பாலச்சந்திரன் கூறி இருப்பதாவது: மாண்டஸ் புயல் புதுச்சேரி அருகே 60கிமீ தொலைவில் உள்ளது. புயல் கரையை கடக்க துவங்கும் போது காற்றின் வேகம் 60முதல்75 கி.மீ வரையில் வீச கூடும். புயல் கரையை நெருங்கி வரும் வேளையில் தரைக்காற்றின் வேகம் அதிகரிக்கும். புயல்கரை யை நெருங்கி வரும் வேளையில் காற்றின் வேகம் 85 கி.மீ வரையில் உயரக்கூடும். புயலின் வெளிப்பகுதி தற்போது கரையை கடக்க துவங்கி உள்ளது. மாண்டஸ் புயலின் மேககூட்டம் ஸ்ரீ ஹரிகோட்டா வரையில் பரவி உள்ளது.


latest tamil news


சென்னை காட்டுப்பாக்கம் திருவள்ளூர், ராணிப்பேட்டை வரையில் தரைக்காற்று 50-60 கி.மீ வேகத்தில் வீசி வருகிறது. சென்னையில் அக்கரை முதல் கோவளம் பகுதி வரையில் நாளை (10 ம் தேதி) காலைவ வரையில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X