அம்பத்துார்:அம்பத்துார், வெங்கடாபுரம் அருகே, நேற்று முன்தினம் மாலை, 16 வயது நர்சிங் மாணவி சென்றார்.
அவரை வழிமறித்த வாலிபர், பீர் பாட்டிலால் தாக்கியதில் பலத்த காயமடைந்த மாணவி, மயங்கி விழுந்தார்.
அங்கிருந்தோர் வாலிபரை பிடித்து, அம்பத்துார் போலீசில் ஒப்படைத்தனர். மாணவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
வாலிபரிடம் போலீசார் விசாரித்ததில், கடலுார் அடுத்த பண்ருட்டியைச் சேர்ந்த அய்யப்பன், 23, என்பதும், தவறுதலான மொபைல் போன் அழைப்பால் மாணவியிடம் நட்பு ஏற்பட்டதும் தெரிந்தது. மேலும், மாணவியை காதலிப்பதாக அய்யப்பன் தொல்லை கொடுத்து வந்ததும், இதனால் மாணவி, அவரிடம் பேசுவதை தவிர்த்ததும் தெரிந்தது.
மாணவி பேசாத ஆத்திரத்தில், பீர் பாட்டிலால் மாணவியின் மண்டையை உடைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அய்யப்பனை கைது செய்தனர்.