ஆவடி, செங்குன்றம் காவல் நிலைய எல்லையில், கஞ்சா கடத்தி வந்த வழக்கில், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த குடாகிஷோர் குமார், 36; திப்புரு ரமேஷ், 26; அனுகூர் சோமேஷ்குமார், 32, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல், அங்குரி கொண்டபாபு, 26, பூஜாரி ராஜூபாபு, 26, பட்டி பிரபாகர ராவ், 31, மாரி ராஜூபாபு, 32, ஆகியோர், போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
போதை பொருள் கடத்தலை தடுக்கும் வகையில், ஏழு பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க, ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் உத்தரவிட்டார்.