வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அதிகாலை 2:50 மணி : மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே முழுமையாக கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. கரையை கடந்த புயல் , காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் எனவும், பிற்பகலில் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும், அது வட உள் மாவட்டங்கள் வழியாக கடந்து செல்லும் எனவும், இந்திய வானிலை மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி அளித்தார்.
இரவு 9:30 மணிக்கு கரையை கடக்க துவங்கிய மாண்டஸ் புயல், அதிகாலை 3 மணி அளவில் முழுமையாக கரையை கடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிகாலை 2:50 மணி : மாமல்லபுரத்தில் மாண்டஸ் புயலின் மையப்பகுதி, கரையை கடந்தது. சென்னையிலிருந்து 30 கி.மீ தொலைவில் புயல் நகர்ந்து வருகிறது. புயல் முழுவதுமாக கரையை கடக்க மேலும் ஒரு மணி நேரமாகும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
அதிகாலை 2:30 மணி : சென்னையிலிருந்து 40 கி .மீ தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. அடுத்த 2 மணி நேரத்திற்கு புயல் கரையை கடப்பது நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதிகாலை 1:50 மணி :மாமல்லபுரத்தில் மாண்டஸ் புயலின் மையப்பகுதி கரையை கடந்து வருகிறது.
அதிகாலை 1:45 மணி : மாண்டஸ் புயல் காரணமாக நுங்கம்பாக்கத்தில் 70. கி.மீ வேகத்தில் காற்று வீசுகிறது.

அதிகாலை 1:20 மணி : நிலவரப்படி, சென்னையில் இருந்து 50 கி.மீ தொலைவிலும், மாமல்லபுரத்திலிருந்து 10 கி.மீ தொலைவிலும், மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
புயலின் மையப் பகுதி கரையை கடக்க துவங்கியுள்ளதால் சென்னை மற்றும் புயல் கடக்கும் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்திற்குள் புயல் முழுவதுமாக கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயலின் கண் பகுதி கரையை கடக்கும் போது மணிக்கு 85 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் எனவும் கன மழை முதல் மிக கனமழை வரை கொட்டத் தீர்க்கும் எனவும் இந்திய வானிலை மையம் மேலும் அறிவித்துள்ளது
சென்னை காட்டுப்பாக்கம் திருவள்ளூர், ராணிப்பேட்டை வரையில் தரைக்காற்று 50-60 கி.மீ வேகத்தில் வீசி வருகிறது. சென்னையில் அக்கரை முதல் கோவளம் பகுதி வரையில் இன்று (10 ம் தேதி) காலை வரையில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.