வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டியது. அதிக பட்சமாக காட்டுப்பாக்கத்தில் 16 செ.மீ., மழை பதிவானது.
மேலும் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு: , நுங்கம்பாக்கம், புழல், பூந்தமல்லி தலா 10 செ.மீ, காஞ்சிபுரம் 7 செ.மீ., மழை பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரை கடந்தது புயல்
புயல் கரையை கடந்தாலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. தவிர உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

சென்னையில் கனமழை தொாடர்ந்து பெய்து வருகிறது சென்னை அண்ணாசாலை, திருவெல்லிக்கேனி, வடபழனி, குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
கனமழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருள் சூழ்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எறியவிட்ட ஓட்டிச் செல்கின்றனர். இடைவிடாது கொட்டித்தீர்க்கும் கனமழையால் வாகனஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

புயல் காரணமாக கிழக்கு கடற்கரை காலையில் வாகனப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. எனினும் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன
மழையால் சாய்ந்த 48 மரங்கள்
மாண்டஸ் புயலின் சீற்றத்தால் கடந்த 4 மணி நேரத்தில் 48க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துள்ளதாகவும் அதனை அப்புறப்படுத்தும் பணி நடந்து வருவதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் 5000க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவிப்பு
மாண்டஸ் புயல் காரணமாக 6 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல், பெங்களூர், ஐதராபாத் திரும்பிச் சென்ற நிலையில், தற்போது சென்னையில் தரையிறங்க வேண்டிய மேலும் 3 விமானங்கள், ஐதராபாத் திரும்பி அனுப்பப்பட்டுள்ளது.
சென்னையில் பஸ்கள் இயக்கம்
சென்னையில் இரவு பஸ் இயக்கம் 12 மணி முதல் 3 மணி வரை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கோயம்பேட்டிலிருந்து 36 பஸ்கள், சென்னையின் பிற பகுதிகளுக்கு அதிகாலை முதல் இயக்கப்படுகின்றன.