அவிநாசி:அவிநாசி அருகேயுள்ள தெக்கலுார் ஸ்ரீ சக்தி இன்டர்நேஷனல் பள்ளியில் 43வது கோவை சகோதயா தடகள திருவிழா நேற்று முதல் துவங்கியது.
இதில், கோவை மண்டலத்துக்கு உட்பட்ட, 83 பள்ளிகளை சேர்ந்த, 2,969 விளையாட்டு வீரர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்கின்றனர். இப்போட்டியில் ஸ்ரீசக்தி குழுமத்தின் தலைவர் தங்கவேலு, இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் அணித்தலைவர் மற்றும் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பாஸ்கரன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
நாளை நடைபெறும் இறுதிப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு பரிசளிக்கும் விழாவில், திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவாளர் செல்வி மற்றும் அர்ஜுனா விருது பெற்ற இந்திய ஒலிம்பிக் தடகள வீரர் ஆரோக்கிய ராஜிவ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கின்றனர்.