பல்லடம்:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது தாலுகாவில், 50 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு, மொத்தம், 4,600 பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வுகள், 2ல், மாவட்டம் முழுவதும் உள்ள, 14 மையங்களில் நடந்தன.
விடைத்தாள்கள், அந்தந்த தாலுகா அலுவலகங்களில், திருத்தும் பணி நடந்தது. பல்லடம் தாலுகாவில், 8 காலி பணியிடத்துக்கு, 306 பேர் தேர்வு எழுதினர். தாலுகா அலுவலகத்திலும் விடைத்தாள் திருத்தும் பணி காலை, 10.30 மணிக்கு துவங்கியது.
தாசில்தார் நந்தகோபால் கூறுகையில், ''விடைகள் அடங்கிய தொகுப்பு, திருத்தும் ஆசிரியர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும்.
இதற்காக, கண்ணாடி கூண்டு அறைக்குள் திருத்தும் பணி நடக்கும். மொபைல் போன் எடுத்து செல்ல அனுமதி இல்லை,'' என்றார்.