சர்வதேச திரைப்பட செய்தி ஆட் பாக்ஸ்
* ஈரானில் இருந்து பறந்து வந்த
பெண் இயக்குனரின் தலைமுடி
விழாவில் 'ஸ்பிரிட் ஆப் சினிமா' விருது ஈரானிய பெண் இயக்குநர் மஹ்னாஸ் முகமதிக்கு வழங்கப்பட இருந்தது. ஹிஜாப் அணியாததால் 22 வயது இளம் பெண் மாஹ்ஷா அமினி கொல்லப்பட்டதற்கு ஈரானிய அரசுக்கு எதிராக போர்க்குரல் எழுப்பியவர் இவர். ஈரானில் பிரபல பெண்ணிய திரைப்பட இயக்குநர்.
இவர் இந்த திரைப்பட விழாவில் பங்கேற்க ஈரானிய அரசு எதிர்ப்பு தெரிவித்து அனுமதி வழங்கவில்லை.
எனவே தனது தலைமுடியின் ஒரு பகுதியை வெட்டி ஒரு பெண் பிரதிநிதி மூலம் விழாவிற்கு அனுப்பியிருந்தார். நேற்று மேடையில் அந்த தலைமுடியை திரைப்பட கழக தலைவர் ரஞ்சித்திடம் அந்த பெண் பிரதிநிதி வழங்கினார். ரூ. 5 லட்சம் விருது தொகையை கேரள அரசு சார்பில் அந்த பெண் பிரதிநிதியிடம் ரஞ்சித் வழங்கினார்.