கொச்சி: இருதரப்பு சம்மதத்துடன் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் கிறித்துவ தம்பதியர், ஒரு ஆண்டு சேர்ந்து வாழ்ந்த பிறகே விவாகரத்துக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற விதிமுறையை கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

மனம் உவந்து விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் கிறிஸ்துவ தம்பதியர் இரண்டு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்திருக்க வேண்டும். அதன் பிறகே விவாகரத்துக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவதாக சட்டத்தில் விதிமுறை உள்ளது. இதை ஓராண்டாக குறைத்து, கேரள உயர் நீதிமன்றம் 2010ல் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த ஓராண்டு கால அளவும் தேவை இல்லை என அதை ரத்து செய்து கேரள உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.