குஜராத் தேர்தலில் சாதனை வெற்றி : பிரதமரை புகழும் சர்வதேச ஊடகங்கள்

Updated : டிச 10, 2022 | Added : டிச 10, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி :'குஜராத்தில், வரலாறு காணாத வெற்றியின் வாயிலாக பா.ஜ., அரசு புதிய சாதனை படைத்திருப்பதற்கு பிரதமர் மோடியின் செல்வாக்கே முக்கிய காரணம்' என, பல்வேறு நாடுகளை சேர்ந்த சர்வதேச ஊடகங்கள் புகழாரம் சூட்டியுள்ளன.குஜராத் சட்டசபைக்கு சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில், பா.ஜ., 156 இடங்களில் வென்று வரலாறு காணாத சாதனை படைத்தது. கடந்த 1995 முதல், தொடர்ந்து ஏழாவது முறையாக
குஜராத் தேர்தல் ,சாதனை   சர்வதேச ஊடகங்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி :'குஜராத்தில், வரலாறு காணாத வெற்றியின் வாயிலாக பா.ஜ., அரசு புதிய சாதனை படைத்திருப்பதற்கு பிரதமர் மோடியின் செல்வாக்கே முக்கிய காரணம்' என, பல்வேறு நாடுகளை சேர்ந்த சர்வதேச ஊடகங்கள் புகழாரம் சூட்டியுள்ளன.



குஜராத் சட்டசபைக்கு சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில், பா.ஜ., 156 இடங்களில் வென்று வரலாறு காணாத சாதனை படைத்தது. கடந்த 1995 முதல், தொடர்ந்து ஏழாவது முறையாக குஜராத்தில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. இது குறித்து, தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் இருந்து வெளியாகும், 'தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்', கிழக்காசிய நாடான, ஜப்பானில் இருந்து வெளியாகும், 'தி நிக்கி ஏசியா, அல்ஜஸீரா, இன்டிபென்டன்ட், ஏ.பி.சி., நியூஸ்' உட்பட பல்வேறு சர்வதேச ஊடகங்களும் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளன.


latest tamil news


'குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட தேர்தல் பிரசாரமே இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்தது. வரும் 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வின் செல்வாக்கை இது மேலும் வலுப்படுத்தும்' என, ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த 'தி கார்டியன்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.பிரதமர் மோடியின் செல்வாக்கு மற்றும் 1995 முதல் தொடர் வெற்றியை சந்தித்து வரும் பா.ஜ.,வின் வளர்ச்சி குறித்தும்
ஜப்பானின், 'தி நிக்கி ஏசியா' செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (5)

Rafi - Riyadh,சவுதி அரேபியா
10-டிச-202215:14:37 IST Report Abuse
Rafi இரண்டு பேர் நாட்டை விற்க இரண்டு பேர் அதை வாங்க அந்த நால்வரின் முதலீட்டுக்கு கிடைத்த வெற்றி. ஹிமாச்சலில் அடைந்த படுதோல்வியை திட்டமிட்டு மறைத்ததும், அதோடு நாடெங்கிலும் நடந்த இடை தேர்தல்களில் சந்தித்த தோல்வி 2024 எப்படி இருக்கும் என்பதை உணர்த்தி விட்டது.
Rate this:
Cancel
10-டிச-202209:11:18 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் பிஜேபி அங்கே தொடர்ந்து ஆளுங்கட்சியாகும் இந்தப்பெருமை அந்த மாநிலத்தின் மூர்க்கர்களையே சாரும் ....
Rate this:
Cancel
Baskar - sollamudiyatha naadu,இந்தியா
10-டிச-202207:34:24 IST Report Abuse
Baskar தமிழ்நாட்டில மட்டும் தான் நாலாயிரம் கோடி செலவு பண்ணி ஜெயிப்பாங்க மக்களாக ஜெயிக்க வாய்த்த அதிசயம் குஜராத்தில் நடந்துள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X