வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மழைக்கு இதமாக இஞ்சி டீயை உறிஞ்சியபடியே, ''திராவிடக் கட்சிகள் பாணியில, தேசிய கட்சி நிர்வாகியும் களம் இறங்கிண்டார் ஓய்...'' என, 'லீடு' தந்த குப்பண்ணாவே தொடர்ந்தார்...
![]()
|
''சென்னை, சோழிங்க நல்லுார் தொகுதிக்கு உட்பட்ட கந்தன்சாவடியில, வீரமாமுனிவர் தெரு இருக்கு... இங்க, 10 ஆயிரம் சதுர அடி நிலத்தை, அதன் உரிமையாளரிடம் இருந்து குத்தகைக்கு எடுத்த பெண் தொழிலதிபர், 'ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பேப்ரிகேஷன்'னு ஒரு நிறுவனத்தை நடத்திண்டு வராங்க ஓய்...
''தன்கிட்ட வேலை பாக்கற ஒரு பெண் ஊழியரிடம், கம்பெனியின் முழு பொறுப்பையும் குடுத்திருந்தாங்க... அந்தம்மா என்னடான்னா, தன் மகனோட சேர்ந்துண்டு, நிறுவனம் இருக்கற இடத்தையே சொந்தம் கொண்டாடி, 'அபேஸ்' பண்ண முயற்சிக்கறாங்க ஓய்...
![]()
|
''அந்தம்மாவோட மகன், பா.ஜ., இளைஞரணி மாவட்ட நிர்வாகியா இருக்கார்... கட்சி பெயரை கேடயமா பயன்படுத்தி, நிலத்தை அபகரிக்க முயற்சி நடக்கறது... பா.ஜ., நிர்வாகி மேல நடவடிக்கை எடுக்கச் சொல்லி, கட்சி தலைமைக்கும், முதல்வர் தனிப்பிரிவுக்கும் புகார் அனுப்பி இருக்காங்க ஓய்...'' என்றார், குப்பண்ணா.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement