வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : உலகின் பெரும் பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பான, 'ஜி - 20' தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதன் மாநாடு அடுத்தாண்டு செப்., 9 மற்றும் 10ல் புதுடில்லியில் நடக்க உள்ளது. இதில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பர். இதற்கு முன்பாக, நாடு முழுதும் 200 ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
ஜி -௨௦ மாநாடு மற்றும் முன்னேற்பாடு கூட்டங்களை சிறப்பாக நடத்துவது குறித்து, மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள், பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், தொழில் அதிபர்களுடன் மத்திய அரசு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.
![]()
|
அப்போது, ''மாநில அரசுகளும், நிர்வாகமும் தங்கள் மாநிலங்களின் முதலீட்டை அதிகரிப்பதற்கு ஜி 20 மாநாட்டை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு அவசியம்,'' என, பிரதமர் பேசினார்.