வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : ''இந்தியர்களால் நம் கலாசாரத்தை சிந்தனையை அடிப்படையாக கொண்டு துவங்கப்பட்ட இயக்கம் ஆர்.எஸ்.எஸ்., மட்டுமே,'' என, அதன் இளைஞரணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா தெரிவித்தார்.
தமிழக பா.ஜ., சிந்தனையாளர் பிரிவு சார்பில் 'தமிழ்நாடு உரையாடல் - 2022' சிறப்பு நிகழ்ச்சி, சென்னையில் நடந்தது.
பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். இளைஞரணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா, 'பல்லாயிரம் ஆண்டுகள் தொடரும் கங்கை -- காவிரி கலாசாரம்' என்ற தலைப்பில் பேசியதாவது:
![]()
|
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து காசிக்கு புனித யாத்திரை செல்கின்றனர். அங்கிருந்து ராமேஸ்வரத்திற்கு யாத்திரை வருகின்றனர். காசியிலும், காஞ்சியிலும் அன்னப்பூர்ணா தேவிக்கு தனி சன்னிதி உள்ளது. இரு சன்னிதிகளிலும் கோபுரம், 6 அடி உயரம் தான்.
சூரியனுக்கு இந்தியாவில் 4 இடங்களில் கோயில்கள் உள்ளன. அதில் ஒன்று, தஞ்சை மாவட்டத்தில் உள்ள சூரியனார் கோயில்.
கன்னட மன்னரான கிருஷ்ண தேவராயர், தமிழ் கவியான ஆண்டாள் பற்றி தெலுங்கில் எழுதியிருக்கிறார். இப்படி, தமிழகத்திற்கும், இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் இடையே உள்ள ஆயிரமாயிரம் ஒற்றுமைகளை பட்டியிட்டு கொண்டே செல்லலாம்.
இந்திய வரலாற்றில், 1880 முதல் 1925 வரையிலான காலகட்டம் மிக முக்கியமானது. இந்த காலகட்டத்தில் தான் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், நீதிக் கட்சி, ஆர்.எஸ்.எஸ்., ஆகிய அமைப்புகள் துவங்கப்பட்டன. இதில் காங்கிரஸ், ஆங்கிலேயர்களால் துவங்கப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியும், நீதிக் கட்சியும் அன்னிய நாடுகளில் இருந்து உருவான சித்தாந்தங்களை கொண்டவை.
![]()
|
இந்தியர்களால், நம் கலாசாரத்தை, சிந்தனையை அடிப்படையாக கொண்டு துவங்கப்பட்ட இயக்கம் ஆர்.எஸ்.எஸ்., மட்டுமே என்றார்.
பின் 'திராவிட மாடலில் போலி பகுத்தறிவுவாதம்' தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
அரவிந்தன் நீலகண்டன், எழுத்தாளர்
சாய் தீபக், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்
கோலாகல சீனிவாஸ், பத்திரிகையாளர்