தரமற்ற மருத்துவ கல்லூரிகள்: சாட்டை சுழற்றுது மத்திய அரசு

Added : டிச 10, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி: தரமான ஆசிரியர்களை நியமிக்காத மருத்துவக் கல்லுாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா லோக்சபாவில் தெரிவித்தார்.லோக்சபாவில் கேள்வி நேரத்தின்போது அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது: சிறப்பான டாக்டர்களை உருவாக்க வேண்டுமானால் தரமான கல்வியை அளிக்க வேண்டும். இதை சரிபார்க்க, நாடு முழுதும்
Mansukh Mandaviya, Strong Action, Medical Colleges, Proper Faculty

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: தரமான ஆசிரியர்களை நியமிக்காத மருத்துவக் கல்லுாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா லோக்சபாவில் தெரிவித்தார்.


லோக்சபாவில் கேள்வி நேரத்தின்போது அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது: சிறப்பான டாக்டர்களை உருவாக்க வேண்டுமானால் தரமான கல்வியை அளிக்க வேண்டும். இதை சரிபார்க்க, நாடு முழுதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லுாரிகளுக்கும் மத்திய அரசு ஆய்வுக்குழுவை அனுப்பி உள்ளது.


latest tamil news

அந்த குழுவினர் ஆய்வு செய்வதோடு மட்டுமின்றி, அந்த கல்லுாரிகளில் தரமான ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர் என்பதற்கான உறுதிப் பத்திரத்தையும் அளிக்க வேண்டும். தரமான ஆசிரியர்களை நியமிக்காத மருத்துவக் கல்லுாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை தொடரும்.


அரசு மருத்துவக் கல்லுாரியில் தரமான ஆசிரியர்கள் இல்லையெனில், அதற்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும். தனியார் கல்லுாரிகள் என்றால் நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும். யார் முறைகேட்டில் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை பாயும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (4)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
10-டிச-202218:19:36 IST Report Abuse
J.V. Iyer தரமற்ற கல்லூரிகளை உடனே மூடவேண்டும். அவர்கள்மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
Rate this:
Cancel
visu - tamilnadu,இந்தியா
10-டிச-202216:07:09 IST Report Abuse
visu எல்லோருக்கும் தெரிந்தே நடக்கும் ஊழல்தான் ஒரே ஆசிரியர் பல இடங்களில் பனி புரிவதாக காட்டுவது இவர்கள் மருத்துவர்கள் என்பதால் இவர்கள் பதிவு என்னை ஆன்லைனில் பதிவு செய்தால் சுலபமாக பிடித்துவிடலாம்
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
10-டிச-202208:30:40 IST Report Abuse
Girija 10 வருடமாக அங்கீகாரம் பெறாமல் தமிழகத்திலும் புதுவையிலும் கலோரி நடத்துகிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X