வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
''ராஜசேகர், நாளைக்கு பேசுறேன்...'' என, மொபைல் போனை, 'கட்' செய்தபடியே வந்த அன்வர்பாய், ''வெளிச் சந்தையை விட, அரசு வழங்குற விதைகளின் விலை அதிகமா இருக்குது பா...'' என, அடுத்த தகவலை சொன்னார்.
![]()
|
''அதெப்படிங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''தமிழக வேளாண் துறை இயக்குனர் அண்ணாதுரையின் நேரடி கட்டுப்பாட்டுல, 'டான்ஸிடா' என்ற, விதை பயன்பாட்டு முகமை செயல்படுது... விதை மற்றும் இடுபொருட்களின் விலையை, இந்த அமைப்பு தான் நிர்ணயம் செய்யுது பா...
''இவங்க விலை, வெளிச் சந்தையை விட, 100 மடங்கு அதிகமா இருக்குது... உதாரணத்துக்கு, வெளி மார்க்கெட்ல, 20 ரூபாய்க்கு விற்குற விதைக்கு, 'டான்ஸிடா' அமைப்பு 40 ரூபாய் நிர்ணயம் செய்யுது பா...
![]()
|
''இதுக்கு, 10 ரூபாய் மானியம் போக விவசாயிகளுக்கு, 30 ரூபாய்க்கு விற்குறாங்க... இதனால, விவசாயிகள், அரசு மேல வருத்தத்துல இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement