முதல்வர் ஸ்டாலின்: தென்காசியில் நடந்தது அரசு விழாவா அல்லது எங்கள் கட்சியின் மாநில மாநாடா என்று சந்தேகப்படும் அளவிற்கு மக்கள் திரண்டு வந்தனர். இந்த அரசு எதுவும் செய்யவில்லை என, எதிர்க்கட்சி தலைவர் கூறுகிறார். ஆனால், இந்த ஆட்சி தொடர வேண்டும் என, வழிநெடுகிலும் மக்கள் வாழ்த்தினர்.

டவுட் தனபாலு: பால் விலை, மின் கட்டண உயர்வுன்னு நீங்க அடுத்தடுத்து கொடுத்த அதிர்ச்சிகளில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில, கூட்டமெல்லாம் தானா கூடுமா...? தலைக்கு எவ்வளவு கொடுத்து இந்தக் கூட்டத்தை உங்க கட்சியினர் கூட்டியிருப்பாங்க என்பது, அரசியலில் சீனியரான தங்களுக்கு தெரியாதா என்ற, 'டவுட்' ஏற்படுதே!