சபரிமலையில் திரண்ட பக்தர் கூட்டம்: 9 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

Added : டிச 10, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சபரிமலை: சபரிமலையில் நேற்று திரண்ட பக்தர் கூட்டத்தால் ஆன்லைன் பதிவுக்கும், தரிசன நேரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத நிலை ஏற்பட்டது. 9 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் படியேறினர். கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டலகால சீசன் துவங்கிய பின், நேற்று அதிக பட்சமாக ஒரே நாளில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் தரிசனத்துக்கு முன்பதிவு செய்திருந்தனர். கூட்டம் அதிகம்
Sabarimala, Lord Ayyappa, சபரிமலை, ஐயப்பன்

சபரிமலை: சபரிமலையில் நேற்று திரண்ட பக்தர் கூட்டத்தால் ஆன்லைன் பதிவுக்கும், தரிசன நேரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத நிலை ஏற்பட்டது. 9 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் படியேறினர்.

கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டலகால சீசன் துவங்கிய பின், நேற்று அதிக பட்சமாக ஒரே நாளில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் தரிசனத்துக்கு முன்பதிவு செய்திருந்தனர். கூட்டம் அதிகம் இருக்கும் என்பதை உணர்ந்த போலீசார் மரக்கூட்டத்தில் இருந்து சரங்குத்தி வழியாக பக்தர்களை திருப்பி விட்டனர். சந்திராங்கதன் ரோட்டில் பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

சரங்குத்தி வழியாக பக்தர்கள் திருப்பி விடப்பட்டதால் பக்தர்களின் காத்திருப்பு நேரமும் அதிகமானது. நேற்று காலை 6:00 மணிக்கு பம்பையில் இருந்து மலையேறிய பக்தர்கள், மதியம் 3:00 மணிக்குதான், 18 படிகளுக்கு பக்கத்தில் வர முடிந்தது. ஆனால் அவர்களின் தரிசன நேரம் காலை 8:00 முதல் 9:00 மணிக்குள் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படி எல்லா 'சிலாட்'களுமே தாறுமாறாயின. 9 முதல் 10 மணி நேரம் வரை தாமதமாக தரிசனம் செய்ய வேண்டியிருந்தது.


latest tamil news

வரிசையில் காத்து நின்ற முதியவர்கள், குழந்தைகள் சிரமப்பட்டனர். பெரிய நடைப்பந்தலில் பிஸ்கட், மூலிகை குடிநீர் வழங்கப்பட்டாலும், அது அனைவருக்கும் கிடைக்கவில்லை. கூட்டத்தால் நேற்று மதியம் நடை அடைப்பது பகல் 1:00 மணிக்கு பதிலாக 1:30 மணி வரை நீட்டிக்கப்பட்டது.

மதியம் நடை அடைக்கப்பட்ட பின்னரும் பக்தர்கள் 18 படிகளில் ஏறி வடக்கு வாசல் வழியாக தரிசனம் நடத்தினர். கூட்டம் நேற்று நள்ளிரவிலும் தொடர்ந்தது. ஒரே நாளில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பால் ஆன்லைன் முன்பதிவு பற்றியும் பக்தர்கள் விமர்சனம் செய்தனர். குறிப்பிட்ட நேரத்தில் எவ்வளவு பக்தர்கள் தரிசனம் நடத்த முடியுமோ அந்த அளவை தாண்டி அதிகம் பக்தர்களை முன்பதிவு செய்ய வைத்தது ஏன் என்று பக்தர்கள் கேள்வி எழுப்பினர்.


latest tamil news

தமிழக ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மனைவி, மகன், தி.மு.க., கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், நாகர்கோவில் மேயருமான மகேஷ் நேற்று முன்தினம் இரவு சபரிமலை வந்து நேற்று காலை நிர்மால்ய தரிசனத்துக்கு பின் புறப்பட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (2)

R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா
10-டிச-202220:27:15 IST Report Abuse
R.MURALIKRISHNAN ஒ அப்ப பெரியார் உங்களுக்கு மக்களை ஏமாற்றி சொத்து சேர்க்க மட்டும்தானா? பெரியாரை வைத்து நல்லா அரசியல் பண்ணறீங்க
Rate this:
Cancel
Kalyanasundaram Linga Moorthi - Accra,கானா
10-டிச-202215:51:33 IST Report Abuse
Kalyanasundaram Linga Moorthi how come dmk, diravida munnetra kalaga ministers and allies gone to worship
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X