வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'மாண்டஸ்' புயல் தாக்கத்திலும், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பனிக்காற்றின் தாக்கம் குறையவில்லை. அதனால், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில், குளிரால் மக்கள் நடுங்கினர்.
மாண்டஸ் புயல் வங்க கடலில் உருவான நாள் முதல், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய உள் மாவட்டங்களில் நிலவிய பனியின் தாக்கம், நேற்று நள்ளிரவு வரை குறையவில்லை.
![]()
|
தமிழகத்தை, வட மாநிலங்களில் இருந்து வீசிய பனிக்காற்றின் தாக்கம் ஒரு பக்கம்; மாண்டஸ் புயலின் சூறாவளி காற்றும், மழையும் இன்னொரு பக்கம் தாக்கியது. இதனால், தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் மழையுடன், பனியின் குளிரும் இணைந்து, மக்களை கிடுகிடுவென நடுங்க வைத்தது. பனிக்காற்று குறையாததால், புயலுடன் இணைந்த வந்த மழை மேகங்கள், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில், மிதமாகவே பெய்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement