வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லோக்சபா தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி சேரும் கமல் முடிவில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதனால் கட்சியின் செயற்குழுவை கூட்டி கூட்டணி குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளார்.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 3.7 சதவீதம் ஓட்டுக்கள் கிடைத்தன. அதை விட ௭ லட்சம் ஓட்டுக்கள் குறைவாக 2021 சட்டசபை தேர்தலில் அக்கட்சி பெற்றது.
அதனால் பெரிய கட்சியுடன் கூட்டணி சேர்வது குறித்து அக்கட்சி ஆலோசித்து வந்தது. சமீபத்தில் தி.மு.க. இளைஞரணி செயலர் உதயநிதிக்கும் ம.நீ.ம. தலைவர் கமலுக்கும் இடையே சினிமா தொடர்பான உறவு ஏற்பட்டது. அந்த உறவு அரசியலில் தொடரும் என இரு தரப்பிலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
![]()
|
இது தொடர்பாக ம.நீ.ம. மாநில நிர்வாகிகள் சிவ.இளங்கோ மவுரியா ஆகியோர் தலைமையிலான குழுவினர் தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் சென்று கூட்டணி திட்டம் தொடர்பாக கட்சியினரிடம் கருத்து கேட்டனர்.
அதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் இறுதி முடிவெடுக்க கட்சியின் உயர் மட்டக் குழுவாக கருத்தப்படுகிற செயற்குழுக் கூட்டத்தை கூட்ட கமல் திட்டமிட்டுள்ளார். டிச. 15ம் தேதி அல்லது இம்மாத இறுதிக்குள் செயற்குழு கூட உள்ளது. அதில் இடம்பெற்றுள்ள 29 பேரிடம் கருத்து கேட்க கமல் முடிவுசெய்துள்ளார்.
மேலும் பொங்கல் விடுமுறையில் மதுரை பழங்காநத்தத்தில் பொதுக்கூட்டம் நடத்துவது குறித்தும் பிப். 21ல் கட்சியின் ஐந்தாம் ஆண்டு துவக்க விழாவை ஒட்டி சென்னையில் மாநாடு நடத்துவது குறித்தும் செயற்குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நமது நிருபர் -