வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் 
ஊட்டி: ''தமிழகம் முழுவதும், உளவுத்துறை செயல்பாடு சரியில்லை,'' என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.
ஊட்டியில், ஹிந்து முன்னணி மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற மாநில தலைவர் காடேஸ்வரசுப்ரமணியன், நிருபர்களிடம் கூறியதாவது: உளவுத்துறை கண்காணிப்பு சரியாக இல்லாததால் தான், கோவையில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தை ஒட்டி, பலர் கைது செய்யப்படுகின்றனர். குன்னுாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரியில், ஊட்டி, குன்னுார், கூடலுாரில், பயங்கரவாதிகள் தங்குவதற்கு வசதிகள் உள்ளன. போதிய ஆவணங்கள் வாங்காமல், சில தங்கும் விடுதிகளில் அறைகள் ஒதுக்கப்படுகின்றன. அவற்றை உளவு பிரிவினர் கண்காணிக்க வேண்டும். மாநிலம் முழுவதும் உளவுத்துறை செயல்பாடு சரியில்லை.வங்கதேசத்தில் இருந்து வந்து சட்ட விரோதமாக குடியேறி உள்ளவர்களை கணக்கெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஊட்டி: ''தமிழகம் முழுவதும், உளவுத்துறை செயல்பாடு சரியில்லை,'' என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.ஊட்டியில், ஹிந்து முன்னணி மாவட்ட
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது