சென்னை-'மாண்டஸ்' புயல் காரணமாக, சென்னை கோட்டையில், தேசியக் கொடி சேதமடைந்ததை தொடர்ந்து, புதிய கொடி மாற்றப்பட்டது.
மாண்டஸ் புயல் காரணமாக, நேற்று சென்னையில் பலத்த காற்று வீசியது. அவ்வப்போது மழையும் பெய்தது.
பகல் 12:30 மணி அளவில், சென்னையில் தலைமை செயலகம் அமைந்துள்ள, செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில், கொத்தளத்தில் அமைந்துள்ள கொடிக்கம்பத்தில் பறந்த தேசியக் கொடி, காற்றில் சேதமடைந்தது.
உடனடியாக, ராணுவ வீரர்கள், சேதமடைந்த தேசியக் கொடியை அகற்றி, புதிய கொடியை பறக்க விட்டனர்.