கர்வா: ஜார்க்கண்டில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்திருந்த போஜ்புரி நடிகையிடம் ரசிகர்கள் அத்துமீறியதால் போலீசார் தடியடி நடத்தினர்.
ஜார்க்கண்ட்டில் கர்வா என்ற நகரில், ஆளும் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரபல போஜ்புரி நடிகை அக் ஷரா சிங் வந்திருந்தார். இவர் ஹிந்தி, 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்றவர் என்பதால், ரசிகர்களிடம் மிகவும் பிரபலம்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஹேமந்த் சோரன் பேசிய பின், இவரது நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சிக்கு வந்த நடிகையை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதுடன், அவரிடம் தவறாகவும் நடக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்திற்குள் சிக்கிய நடிகையை மீட்க, ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர். ரசிகர்கள் அத்துமீறலால் கோபடைந்த நடிகை நிகழ்ச்சியை பாதியிலேயே ரத்து செய்து விட்டு சென்றார்.