சென்னை: பத்தாம் வகுப்பு பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவர்களிடம் ஜாதி மதம் பெற்றோரின் ஆண்டு வருமானம் உள்ளிட்ட 13 தகவல்களை சேகரிக்க பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
நடப்பு கல்வி ஆண்டில் பொது தேர்வு எழுத உள்ள 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களிடம் 13 வகையான தகவல்களை சேகரிக்குமாறு அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேதுராம வர்மா சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதன்படி மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பாலினம், ஜாதி, மதம், பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயர் ஆண்டு வருமானம் உள்ளிட்ட தகவல்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பெறப்பட உள்ளன.
மேலும் மாணவர் அல்லது பெற்றோரின் மொபைல் போன் எண் பாடத் தொகுப்பு பயிற்று மொழி வீட்டு முகவரி ஆகிய தகவல்களையும் பெற்று பள்ளிக் கல்வித் துறையின் 'எமிஸ்' தளத்தில் பதிவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.