சென்னை: 'வி.சி., கட்சியை தடை செய்யக் கோரி, ஹிந்து மக்கள் கட்சி சார்பில் டிச.12ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, அக்கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: சமீப காலமாக வி.சி., கட்சியினர், பிரிவினை சக்திகளோடு கைகோர்த்து, தனித் தமிழ்நாடு கோரிக்கை எழுப்புகின்றனர். தடை செய்யப்பட்ட 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' போன்ற அமைப்புகளை ஆதரித்து பேசி வருகின்றனர்.
ஹிந்துக்களுக்கு எதிராகவும், ஹிந்து நம்பிக்கைகளுக்கு எதிராகவும், வி.சி., தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதை கண்டித்தும், அக்கட்சியை தடை செய்யக் கோரியும்,டிச. 12ம் தேதி தமிழகம் முழுதும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன், கண்டனஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.