மூணாறு : கேரளாவில் தென்மேற்கு பருவ மழை செப்டம்பர் இறுதியுடன் முடிவுக்கு வந்தபோதும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
தற்போது மாண்டஸ் புயலால் மாநிலத்தில் இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்தது. அதனால் இடுக்கி, பத்தனம்திட்டா, பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று எல்லோ அலெர்ட் முன்னெச்சரிக்கை விடுத்தது.
இடுக்கி, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (டிச.10) எல்லோ அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் நாளையும் (டிச.11), நாளை மறுநாளும் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.