இரவில் தடை.. காலையில் அனுமதி: மன்னர் கால மரபை மாற்ற திமுக அரசு முயற்சி?

Added : டிச 10, 2022 | கருத்துகள் (24) | |
Advertisement
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து காவடி எடுக்க இரவில் விதிக்கப்பட்ட தடை, நேற்று காலையில் நீக்கப்பட்டதால், காவடி பவனி புறப்பட்டு சென்றது. மன்னர் கால மரபை மாற்ற தி.மு.க. அரசு முயற்சிப்பதாக பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூருடன் இணைந்திருந்த போது மன்னர் உத்தரவுப்படி, கார்த்திகை கடைசி வெள்ளியில்
Police, Police Station, DMK, திமுக, போலீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து காவடி எடுக்க இரவில் விதிக்கப்பட்ட தடை, நேற்று காலையில் நீக்கப்பட்டதால், காவடி பவனி புறப்பட்டு சென்றது. மன்னர் கால மரபை மாற்ற தி.மு.க. அரசு முயற்சிப்பதாக பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூருடன் இணைந்திருந்த போது மன்னர் உத்தரவுப்படி, கார்த்திகை கடைசி வெள்ளியில் குமாரகோவிலுக்கு காவடி எடுப்பது வழக்கம். மன்னர் ஆட்சி மறைந்த பிறகும் இந்த மரபு கடை பிடிக்கப்படுகிறது.

நேற்று கடைசி வெள்ளி என்பதால் நேற்று முன்தினம் இரவு தக்கலை போலீஸ் ஸ்டேஷனில் ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. நள்ளிரவில் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து காவடி எடுக்க வேண்டாம் என்று மேலிட உத்தரவு வந்ததால் காவடி அபிஷேகம் உள்ளிட்ட சடங்குகள் நிறுத்தப்பட்டன.


latest tamil news


இதுபற்றி தகவல் தெரிந்து பா.ஜ., மற்றும் ஹிந்து முன்னணியினர் ஏராளமானோர் போலீஸ் ஸ்டேஷனில் குவிந்தனர். போலீஸ் எடுக்காத பட்சத்தில் அங்கிருந்து காவடி எடுக்க இவர்கள் முடிவு செய்தனர்.

இந்நிலையில் அதிகாலையில் மீண்டும் போலீசிற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து காலையில் காவடிகள் புறப்பட்டு சென்றன. மன்னர் காலத்தில் இருந்து வரும் மரபுகளை தி.மு.க., அரசு மாற்ற முயற்சிப்பதாக பக்தர்கள் குற்றம் சாட்டினர்.

இதுபோல தக்கலை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து , பறக்கும் காவடி, வேல்காவடி, மலர் காவடி என நுாற்றுக்கணக்கான காவடிகள் குமாரகோவிலுக்கு வந்தன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (24)

Vena Suna - Coimbatore,இந்தியா
10-டிச-202217:59:06 IST Report Abuse
Vena Suna பாவாடைக்காரனுக்கு ஸ்டாலின் காவடி தொக்கறார்.போலீஸ் ஸ்டாலினுக்கு காவடி தூக்குகிறார்கள்.
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
10-டிச-202212:44:21 IST Report Abuse
Rafi உருவ வழிபாடு தமிழகத்தில் இல்லை என்று கடைசியாக கிடைத்த கீழடி ஆரராய்ச்சி மூலம் அறிந்து கொள்ள முடிந்தது, அதன் பிறகு வந்த ஜைன, சமண கோவில்கள் எல்லாம் இந்து கோவில்களாக அபகரிக்கப்பட்டு அவர்கள் விரட்டப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றது.
Rate this:
Unab Jesse - Riyadh,சவுதி அரேபியா
10-டிச-202215:34:42 IST Report Abuse
Unab Jesseஉருவ வழிபாடு இல்லைனு நீ சொல்றிய இல்ல கீழடி ஆராய்ச்சி சொல்லுதா? முதலில் மதம் நா என்ன அத எதுக்கு மனிதன் பின்பற்ற வேண்டும்...
Rate this:
abibabegum - madurai- Anna nagar-எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் ,இந்தியா
10-டிச-202216:03:38 IST Report Abuse
abibabegumஇந்தியா வரலாறு நல்லபடி .... கோவில்கள் அபகரிப்பது...
Rate this:
Sankaran - chennai,இந்தியா
11-டிச-202200:36:44 IST Report Abuse
Sankaranஈரான்ல நடப்பது அமைதியா அல்லது கொலைவெறியா?.....
Rate this:
Cancel
10-டிச-202212:17:25 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் தலைமைக் குடும்பமே மன்னர் குடும்பத்தானுங்கோ ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X