சென்னை: மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில், மதியத்திற்குள் 100% மின்விநியோகம் வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
புயல் குறித்து மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: மாண்டஸ் புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 355 துணை மின் நிலையங்களில், 10 துணை மின் நிலையங்களில் மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் 11,000 பேரும், சென்னையில் மட்டும் 1,100 மின் பணியாளர்கள் காலை முதல் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சேதம் அடைந்த மின்கம்பங்கள் குறித்து மின்சாரம் வாரியம் சார்பில், ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மதியத்திற்குள் 100% மின்விநியோகம் வழங்கப்படும்
மழை காரணமாக மின்சாரத்துறையில் பெரிய சேதாரங்கள் ஏற்படவில்லை.மதியத்திற்குள் 100% மின்விநியோகம் வழங்கப்படும். மின் விநியோகத்தில் பாதிப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.