வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், 8 மாவட்டங்களுக்கு, சென்னை வானிலை மையம் 'ஆரெஞ்ச் அலெர்ட்' விடுத்துள்ளது.
கன முதல் மிக கன மழை பெய்யும் என்பதற்கான 'ஆரெஞ்ச் அலெர்ட்' அறிவிப்பானது, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

மேலும், சென்னை, நீலகிரி, ஈரோடு சேலம், கிருஷ்ணகிரி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்பதற்கான 'மஞ்சள் நிற அலெர்ட்' -யும் வானிலை மையம் விடுத்துள்ளது.