வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் 25 செ.மீ., மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு கரையை கடந்தது. இதனால், தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பதிவாகி உள்ளது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் 25 செ.மீ., மழை பதிவாகியது.
இதனை தொடர்ந்து,
ராணிப்பேட்டை மாவட்டம் மின்னல், பனப்பாக்கத்தில் தலா 20 செ.மீ.,

காஞ்சிபுரத்தில் 19 செ.மீ.,
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, ஆவடியில் தலா 17 செ.மீ.,
காட்டுகுப்பம், திருத்தணியில் தலா 16 செ.மீ.,
அயனாவரம் குன்றத்தூர், காட்டுக்குப்பம், திருத்தணியில் தலா 16 செ.மீ.,
அரக்கோணம், உத்தரமேரூர், பெரம்பலூரில் தலா 14 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.