சென்னை : 'அசோக் லேலாண்டு' நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ஷெனு அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகளவில், 'முதல் 10' கனரக வாகன நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெறுவது எனும் இலக்கை அடையும் வகையில், நிறுவனத்தை ஷெனு அகர்வால் வழி நடத்துவார் என்று அசோக் லேலாண்டு தெரிவித்துள்ளது.
ஷெனு அகர்வால் இதற்கு முன், 'எஸ்கார்ட்ஸ் குபோடா' நிறுவனத்தின் தலைவராக பணிபுரிந்துள்ளார்.
மேலும், விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கான வணிகத்தின் தலைமை நிர்வாகியாக, ஏழு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உள்ளது.