ஏன்... ஏன்... ஏன்... காரில் தொங்கினேன்? மேயர் பிரியா விளக்கம்
ஏன்... ஏன்... ஏன்... காரில் தொங்கினேன்? மேயர் பிரியா விளக்கம்

ஏன்... ஏன்... ஏன்... காரில் தொங்கினேன்? மேயர் பிரியா விளக்கம்

Updated : டிச 12, 2022 | Added : டிச 12, 2022 | கருத்துகள் (177) | |
Advertisement
சென்னை: மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்தபோது முதல்வர் ஸ்டாலினின் கான்வாய் காரில் சென்னை மேயர் பிரியா தொங்கியபடி பயணித்தது சர்ச்சையானது. முதல்வருக்கு முன்பாக அவர் ஆய்வு செய்யும் இடத்திற்கு செல்லவேண்டி இருப்பதால் கான்வாய் காரில் ஏறினேன் என பிரியா விளக்கமளித்துள்ளார்.'மாண்டஸ்' புயலால் பாதிக்கப்பட்ட, சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம்
ஏன்... ஏன்... ஏன்... காரில் தொங்கினேன்? மேயர் பிரியா விளக்கம்

சென்னை: மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்தபோது முதல்வர் ஸ்டாலினின் கான்வாய் காரில் சென்னை மேயர் பிரியா தொங்கியபடி பயணித்தது சர்ச்சையானது. முதல்வருக்கு முன்பாக அவர் ஆய்வு செய்யும் இடத்திற்கு செல்லவேண்டி இருப்பதால் கான்வாய் காரில் ஏறினேன் என பிரியா விளக்கமளித்துள்ளார்.



'மாண்டஸ்' புயலால் பாதிக்கப்பட்ட, சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில், முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் (டிச.,10) ஆய்வு செய்தார். அப்போது, முதல்வரின் கான்வாய் காரில், சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, எம்.எல்.ஏ., எபிநேசர், மாநகராட்சி நிலைக்குழு தலைவர் இளைய அருணா ஆகியோர் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர். இதற்கான, 'வீடியோ' சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மேயர் பதவியில் இருக்கும் பிரியா, கான்வாய் காரில் தொங்கியபடி பயணித்தது பலரது விமர்சனத்துக்கு உள்ளானது.



latest tamil news

இந்த நிலையில் காரில் தொங்கியபடி சென்றதற்கான காரணத்தை மேயர் பிரியா தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: காசிமேட்டில் இரண்டு இடங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். ஒரு இடத்தில் எங்களுடன் ஆய்வு செய்தார். அடுத்த இடத்தில் ஆய்வு செய்யும் முன் அவருக்கு முன்பாக அந்த இடத்திற்கு நாங்கள் செல்ல வேண்டும். அவருக்கு முன்பாக சென்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இரண்டு இடங்களுக்கும் இடையில் தொலைவு அதிகமாக இருந்தது. இதனால் நான் நடந்து சென்று கொண்டு இருந்தேன்.



latest tamil news

திடீரென அங்கு கான்வாய் வந்தது. அந்த கான்வாய் வந்து கொண்டு இருந்ததால் அதிலேயே ஏறிவிடலாம் என்று ஏறிட்டேன். ஆனால் இதை வைத்து இவ்வளவு சர்ச்சை செய்வார்கள் என்று நினைக்கவில்லை. பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டோம். இதில் முதல்வருக்கு முன்பாக செல்ல வேண்டும் என்றுதான் சென்றேன். என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. கான்வாயில் இப்படி வருமாறு என்னிடம் சொல்லவில்லை. இதை சர்ச்சையாக்கி உள்ளனர், இவ்வாறு அவர் விளக்கமளித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (177)

Nesan - JB,மலேஷியா
18-டிச-202222:56:54 IST Report Abuse
Nesan அடி பாவி உன் கால் வழுக்கினால், உன் கெதி அதே கெதிதான். வெளியே சொல்லாதீங்க வெட்கக்கேடான விஷயம். இதை அழகு பார்க்கும் முதல்வர் வேறே ....
Rate this:
Cancel
P Ravindran - Chennai,இந்தியா
18-டிச-202217:58:34 IST Report Abuse
P Ravindran வெட்கட்கேடு
Rate this:
Cancel
Indian - chennai,இந்தியா
17-டிச-202221:51:57 IST Report Abuse
Indian 1978-80 காலகட்டத்தில் நாங்கள் பள்ளிக்கு தினம் 6km நடந்து செல்வோம் அப்போது சில நாள் agricultur tracktor போகும்போது ஓடும்போது எறிக்கொள்ளவேண்டும் , ஏனெனில் driver wont stop . சில நேரங்களில் விழுந்து எழுவோம் எண்களின் நோக்கம் பள்ளிக்கு காலை இறைவணக்கம் கூட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் என்பதே , இல்லையேல் எங்களுக்கு அடி கிடைக்கும் . ஆகையால் நாங்கள் இன்று நல்ல நிலையில் உள்ளோம் என்பதனையும் உணர்த்துகிறேன். நங்கள் ஓடும் வண்டியில் ஏறியதால் முரட்டுக்குணம் படைத்தவர் என்று நினைக்க வேண்டாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X