சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

 தமிழகத்தில் பா.ஜ., தனித்து போட்டியிட பிரதமர் பச்சைக் கொடி: அண்ணாமலை

Updated : டிச 13, 2022 | Added : டிச 13, 2022 | கருத்துகள் (40) | |
Advertisement
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: லோக்சபா தேர்தலில், ஐந்து, ஆறு, 'சீட்'களுக்காக யாரிடமும் தொங்கி நின்று, அவர்கள் கொடுக்கும் தொகுதிகளில் போட்டியிட்டு, ஒன்றிரண்டு சீட்டுகள் ஜெயிப்பதை விரும்ப வில்லை. இதை பிரதமரிடம் சொன்னேன்; தனித்து போட்டியிட பச்சைக் கொடி காட்டி விட்டார். தனித்துப் போட்டியிடும் அளவுக்கு, நாம் வளர்ந்தாக வேண்டும்.டவுட் தனபாலு:உங்களது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை:

லோக்சபா தேர்தலில், ஐந்து, ஆறு, 'சீட்'களுக்காக யாரிடமும் தொங்கி நின்று, அவர்கள் கொடுக்கும் தொகுதிகளில் போட்டியிட்டு, ஒன்றிரண்டு சீட்டுகள் ஜெயிப்பதை விரும்ப வில்லை. இதை பிரதமரிடம் சொன்னேன்; தனித்து போட்டியிட பச்சைக் கொடி காட்டி விட்டார். தனித்துப் போட்டியிடும் அளவுக்கு, நாம் வளர்ந்தாக வேண்டும்.latest tamil newsடவுட் தனபாலு:

உங்களது துணிச்சலுக்கு பாராட்டுகள்... அதே நேரம், நீங்களும், அ.தி.மு.க.,வும் தனித்தனியா நின்னா, ஆளுங்கட்சிக்கு எதிரான ஓட்டுகள் பிரிஞ்சு, அவங்களது வெற்றி சுலபமாகிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை... இந்தக் கணக்கையும் மனசுல வச்சு முடிவெடுங்க!latest tamil newsமுதல்வர் ஸ்டாலின்:

தி.மு.க., ஆட்சிக்கு வந்த போது, கொரோனாவை கட்டுப்படுத்தினோம். அது, முடிவதற்கு முன் வெள்ளம் வந்தது; பெரிய மழை வந்தது; அதையும் சமாளித்து வெற்றி கண்டோம். இப்போது பெரிய புயல் வந்தது. புயலையே சந்திக்கிற ஆற்றல், இன்றைக்கு இந்த திராவிட மாடல் ஆட்சிக்கு இருக்கிறது. எல்லாரும் எனக்கு போன் செய்து, 'ரொம்ப சிறப்பாக செய்து விட்டீர்கள்...' என, பாராட்டுகின்றனர். சமூக வலைதளங்களில் பார்த்தீர்கள் என்றால், பாராட்டுகள் தான் வந்து கொண்டிருக்கின்றன.டவுட் தனபாலு:

எல்லா ஆற்றலும் இருக்குதுங்கிறீங்க... 'மாதம் ஒரு முறை மின் கட்டணம்; பழைய பென்ஷன் திட்டம்; மகளிருக்கு, 1,000 உதவித்தொகை'ன்னு தேர்தல் நேரத்துல அள்ளிவிட்ட ஏராளமான வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஆற்றல் மட்டும் இல்லாம போனது ஏன்னு, 'டவுட்' எழுதே!
பத்திரிகை செய்தி:

'சட்டத்தை மீறி, ஆபத்தை உணராமல், முதல்வர் ஸ்டாலினின், 'கான்வாய்' காரில் தொங்கியபடி பயணித்த சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.டவுட் தனபாலு:

கார்ல தொங்கியவங்க மேல தப்பு என்றால், காருக்குள் இருந்த முதல்வரின் பாதுகாப்பு பிரிவு போலீசார், அவங்களை தொங்க அனுமதிச்சதும் தப்பு தானே... அதனால, நடவடிக்கை எடுத்தால், அவங்க மேலயும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (40)

Vijay D Ratnam - Chennai, Thamizhagam.,இந்தியா
13-டிச-202221:56:28 IST Report Abuse
Vijay D Ratnam பாஜக தனித்து போட்டியிட்டால் திமுக 39/39 வெற்றி உறுதி. திமுக ஏற்கெனவே வலுவான கூட்டணி. போதாக்குறைக்கு பள்ளிவாசல்கள் பாதிரியார்களால் உத்தரவிடப்பட்டு இஸ்லாமிய, கிருஸ்தவ வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் விழும் கட்சி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குடும்ப வாக்குகள் 90 சதவிகிதம் பெரும் கட்சி. தனித்து போட்டியிட்டால் மீண்டும் சிங்கிள் டிஜிட் வாக்கு வங்கிதான். அண்ணாமலை மண்ணை கவ்வினார், இளம் தலைவர், இளைஞர்களின் ஐகான், இரண்டாம் ஸ்டாலின் மூன்றாம் கலைஞர் நான்காம் அண்ணா, ஐந்தாம் பெரியார் உதயநிதியின் உழைப்புக்கு கிடைத்த இமாலய வெற்றி என்று எச்ச சோறு, சைக்கோ, தெருநாவள்வன், டோல்கேட் முருகன் தொடங்கி பெரியாரிஸ்ட், கம்யூனிஸ்ட், டெரரிஸ்ட், இவாஞ்சலிஸ்ட், நக்ஸ்லைட் தொடங்கி எலும்புத்துண்டுக்கு வாலாட்டும் மீடியாக்கள் என்று கொண்டாடி தீர்த்துவிடுவார்கள். போட்டியே மீண்டும் அதிமுகவா திமுகவா என்று மாறிவிடும். ஓவர் கான்ஃபிடனஸ் உடம்புக்கு ஆகாது அண்ணாத்தே.
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
13-டிச-202218:35:39 IST Report Abuse
Rafi வீட்டில் பெண்டாட்டியிடம் அடிவாங்கிவிட்டு, வெளியில் மிரட்டலோடு வரும் வடிவேலு நினைவில் வந்து செழிக்கின்றார், ஒற்றை ஒட்டு பெற்றாலும் கொஞ்சம் வடிவேல் தைரியத்தை காட்டிபார்த்திருக்கின்றார்.
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
13-டிச-202218:32:09 IST Report Abuse
venugopal s தனித்துப் போட்டி என்றால் முப்பத்தொன்பது வேட்பாளர்கள் வேண்டுமே, என்ன செய்யப் போகிறார்? எங்கிருந்து கொண்டு வருவார்? பாவம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X