வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: வாரிசு அரசியல் குற்றச்சாட்டு முதல்வர் ஸ்டாலின் அரசியலுக்கு வருவதில் இருந்தே இருக்கிறது. வாரிசுகளுக்கு பதவி கொடுக்க கூடாது என விதி இல்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: உதயநிதிக்கு அமைச்சர் பதவி மிக தாமதமாக கொடுப்பதாக நினைக்கிறேன். தேர்தலின்போது துடிப்புடன் செயலாற்றியவர் அவர்.
உதயநிதிக்கு எந்தத் துறை கொடுப்பது என்பது குறித்து முதல்வர் நாளை அறிவிப்பார். அமைச்சராக உதயநிதி சிறப்பாக செயல்படுவார். வாரிசு அரசியல் குற்றச்சாட்டு முதல்வர் ஸ்டாலின் அரசியலுக்கு வருவதில் இருந்தே இருக்கிறது. வாரிசுகளுக்கு பதவி கொடுக்க கூடாது என விதி இல்லை.

இவற்றையெல்லாம் மக்கள் பார்த்துக் கொள்வார்கள். இது எல்லா கட்சியிலும் இருப்பது தான் அதில் ஒன்றும் தப்பு இல்லை. உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு கொடுப்பது கூட்டான ஒரு முடிவு தான். அவருடன் இணைந்து நாங்களும், எங்களுடன் இணைந்து அவரும் செயல்படுவார். இவ்வாறு அவர் கூறினார்.