அது பிறந்து, பறந்தது 54 நெடிய ஆண்டுகளுக்கு என்றாலும், அமெரிக்காவிலுள்ள போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபத்தை பொழிந்திருக்கிறது. அதேபோல, உலகம் சுற்றும் விமான பயணியருக்கு இனிய நினைவுகளையும் கொடுத்திருக்கிறது.
ஆம், 'போயிங் 747' என்ற மாடலின் கடைசி விமானத்தை, 'அட்லஸ் ஏர்' விமான சேவை நிறுவனத்திற்கு அனுப்பியதோடு போயிங் பிரிவு இழுத்து மூடப்பட்டது.
'ஜம்போ ஜெட்' என்று அழைக்கப்பட்ட 747, சர்வதேச விமான நிலையங்களின் அடையாளமாக இருந்தது. சரி, மொத்தம் எத்தனை போயிங் 747ஐ தயாரித்திருக்கின்றனர்; வெறும் 1,574 உறுப்படிகளை மட்டுமே போயிங் தயாரித்துள்ளது!