எதுக்கு இவ்ளோ போலீஸ்? முதல்வர் வீட்டை சுற்றி 400 பேர்!

Added : டிச 20, 2022 | கருத்துகள் (57) | |
Advertisement
சென்னை : வீடு, ஆபீஸ் மற்றும் கட்சி அலுவலகம் என, முதல்வர் ஸ்டாலின் பாதுகாப்புக்காக, தினமும் 400க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்படும் தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில், முதல்வர் ஸ்டாலின் வீடு உள்ளது. இந்த வீட்டில், அமைச்சர் உதயநிதியும் வசித்து வருகிறார். முதல்வர் வீட்டை சுற்றி, 17 இடங்களில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு
DMK, MK Stalin, security, police, ஸ்டாலின், திமுக, பாதுகாப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : வீடு, ஆபீஸ் மற்றும் கட்சி அலுவலகம் என, முதல்வர் ஸ்டாலின் பாதுகாப்புக்காக, தினமும் 400க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்படும் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை, ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில், முதல்வர் ஸ்டாலின் வீடு உள்ளது. இந்த வீட்டில், அமைச்சர் உதயநிதியும் வசித்து வருகிறார். முதல்வர் வீட்டை சுற்றி, 17 இடங்களில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அங்கு சுழற்சி முறையில், 300க்கும் மேற்பட்ட போலீசார், தினசரி பணியில் உள்ளனர்.

சட்டம் - ஒழுங்கு மட்டுமல்ல, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ஏற்கனவே, போலீஸ் பற்றாக்குறை நீடித்து வரும் நிலையில், முதல்வர் வீட்டைச் சுற்றி, அளவுக்கு அதிகமாக போலீசாரை குவித்து வருவது கடும் விமர்சனத்தை கிளப்பி உள்ளது.


latest tamil news

இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலினுக்கு, மத்திய அரசு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு அளித்துள்ளது. தமிழக காவல் துறையில், முதல்வர் பாதுகாப்புக்கு என, எஸ்.பி., தலைமையில் தனிப்பிரிவு செயல்படுகிறது.

முதல்வருக்கான பாதுகாப்பில், 'எக்ஸ் 95' என்ற துப்பாக்கியும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி இருக்கையில், முதல்வர் வீட்டை சுற்றி, தினமும் அளவுக்கு அதிகமான போலீசாரை ஈடுபட வைப்பது தேவையற்றது.

அதேபோல, தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தை சுற்றியும், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இது தவிர, முதல்வருக்காக தலைமை செயலகம் அமைந்துள்ள கோட்டையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

நான்கு நாட்களுக்கு முன், முதல்வர் வீட்டு பாதுகாப்பு பணிக்கு என, போக்குவரத்து போலீசார், 103 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களின் பணியே சாலைகளில் போக்குவரத்தை சீர் செய்வதும், வாகன சோதனை செய்வது தான்.

இவர்களையும் விட்டு வைக்காமல், முதல்வர் வீட்டு பாதுகாப்பு பணிக்கு அனுப்புவது சரியா என்பது, அதிகாரிகளுக்கே வெளிச்சம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (57)

Baskar - sollamudiyatha naadu,இந்தியா
22-டிச-202212:52:52 IST Report Abuse
Baskar கலி காலத்தில் தீய சக்திகள் வளரும் . வளரட்டும்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
21-டிச-202210:21:48 IST Report Abuse
Bhaskaran கருணாநிதி முதல்வராக இருந்தபோது இத்தனை காவலர் இல்ல மெயின் ரோடு ஆரம்பத்தில் பந்தோபஸ்து உண்டு Antha பகுதியில் இருந்த ஒரு மருத்துவமனைக்கு நான் சிகிச்சைக்காக செல்லும் போது பார்த்துள்ளேன் மக்களை தொந்தரவு செய்யமாட்டார்கள் .
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
20-டிச-202222:53:57 IST Report Abuse
Anantharaman Srinivasan அந்தக்காலத்தில் மன்னர்களுக்கு குதிரைப்படை யானைப்படை காலாட்படை இருந்ததுபோல் இப்பொழுது மத்திய போலீஸ் மாநில போலீஸ் போக்குவரத்து போலீஸ் என. பல வகை பாதுகாப்பு முதல்வருக்கு. கோடிக்கணக்கான மக்களுக்கு எவ்வளவு தேவைப்படுமென்பது அவர்களுக்கு தெரியவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X